`போலி வாக்காளர்கள் புகார்!’ - சோதனை செய்யவந்த அதிகாரிகளைச் சிறைபிடித்த இருளர்கள்! | bogus voter investigation in thiruporur ; people holds protest

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (08/12/2018)

கடைசி தொடர்பு:21:00 (08/12/2018)

`போலி வாக்காளர்கள் புகார்!’ - சோதனை செய்யவந்த அதிகாரிகளைச் சிறைபிடித்த இருளர்கள்!

இடைத்தேர்தல் அறிவிக்கும் முன்பே திருப்போரூர் பகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது. திருப்போரூர் பகுதியில் உள்ள பஞ்சம்திருத்தி கிராமத்தில் வாக்காளர் அடையாள அட்டைகளை சரிபார்க்க வந்த அதிகாரிகளை அப்பகுதி மக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வாக்காளர் அடையாள அட்டை சோதனை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வரலாம் என்பதால் அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் இப்போதே தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டன. இரண்டு கட்சிகளும் பூத் ஏஜென்டுகளை நியமித்துத் தேர்தல் வேலைகளில் பரபரப்பாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ‘திருப்போரூர் பகுதியில் உள்ள பஞ்சம்திருத்தி கிராமத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வெளியூரில் இருந்து மீட்கப்படும் கொத்தடிமைகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை வாங்கிக் கொடுத்து வைத்துள்ளார்.

வாக்காளர் அடையாள அட்டை

வெளியூரில் இருக்கும் அவர்கள் தேர்தல் போன்ற காலங்களில்தான் அந்த கிராமத்திற்கு வருகிறார்கள். போலி வாக்காளர்கள் அதிகம் இருப்பதால் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்’ என அரசியல் பிரமுகர்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் இன்று பஞ்சம்திருத்தி கிராமத்திற்கு அதிகாரிகள் வந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள இருளர்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும். ஆய்வு வருவதற்கு முன்பு எங்களுக்குத் தெரிவித்து விட்டுத்தான் வரவேண்டும் என அதிகாரிகளைச் சிறைபிடித்தனர். இதனால் அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பிசென்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க