வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (09/12/2018)

கடைசி தொடர்பு:03:00 (09/12/2018)

புதுக்கோட்டையில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் மூதாட்டி ஒருவர் பலி!

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

மூதாட்டி

கோட்டைப்பட்டினம் ரஹ்மத் நகரைச் சேர்ந்தவர் ரையானத்தம்மாள்(65) கணவர் இறந்துவிட்டார். தனது மகன்களுடன் ரையானத்தம்மாள் வசித்து வந்தார். கடந்த இருவாரங்களுக்கு  முன்பு ரையானத்தம்மாளுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அருகே உள்ள மருத்துவமனையில் கிச்சை பெற்றுள்ளார். காய்ச்சல் குணமடையாததால், மணமேல்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனாலும், காய்ச்சல் குணமடையவில்லை, அங்கு நிலைமை மோசமானதைத் தொடர்ந்து, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பன்றிக்காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் தொடர் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.