ஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம் | saint named mookkupodi sithar passed away this morning

வெளியிடப்பட்ட நேரம்: 12:01 (09/12/2018)

கடைசி தொடர்பு:12:01 (09/12/2018)

ஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்

திருவண்ணாமலை சேஷாத்திரி ஆசிரமத்தில் மூக்குப் பொடி சித்தர் இன்று அதிகாலை ஜீவசமாதி ஆனார்.

மூக்குப் பொடி சித்தர்

திருவண்ணாமலையில், மிக முக்கிய சித்தர்களில் ஒருவர் மூக்குப் பொடி சித்தர். இவர் பார்த்தாலே போதும் என்று பல வி.ஐ.பி.கள் மணிக்கணக்கில் காத்துக்கொண்டு கிடந்துள்ளனர். இவரின் பார்வை நம்மீது படாதா என்று நினைத்து ஏக்கம் அடைந்துள்ளார்கள் பல வி.ஐ.பி.கள். அந்த அளவுக்குச் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார். இவருக்கென்று வீடு, ஆசிரமம் என்று எதுவுமே கிடையாது. நினைக்கின்ற இடத்தில் படுத்துக்கொள்வார். யாரிடம் வேண்டுமானாலும் கை நீட்டி உணவு கேட்டு வாங்கிச் சாப்பிடுவார். யாரிடம் அவர் உணவு கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறாரோ அவர்கள், அவர்களுக்குக் கிடைத்த பெரிய புண்ணியம் என்று நினைப்பார்கள். மூக்குப் பொடி சித்தர் அதிக அளவில் மூக்குப் பொடியை மட்டுமே போடுவார். உணவு இல்லாமல் கூட இருந்துவிடுவார். ஆனால், மூக்குப் பொடி இல்லாமல் இருக்கவே மாட்டார். இவரைப் பார்க்க வரும் பக்தர்கள் அதிக அளவில் மூக்குப் பொடியை மட்டுமே வாங்கி வருவார்கள். பணம் கொடுத்தால் வாங்கமாட்டார். மூக்குப்பொடி கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லமாட்டார்.

சித்தருடன் தினகரன்

இவரின் தீவர பக்தர்களில் ஒருவர் டி.டி.வி தினகரன் அரசியல் சார்ந்து முக்கிய முடிவுகள் எடுக்கும்போது திருவண்ணாமலை வந்து முதலில் முக்குப் பொடி சித்தரிடம் ஆசி வாங்கிக்கொண்டுதான் அந்த செயலில் இறங்குவார். ஆசி என்றால் கைவைத்து ஆசி வழங்குவது அல்ல. அவரின் ஒரு பார்வை மட்டுமே ஆசி.  அந்த ஒரு பார்வைக்காக பல மணி நேரம் காத்துக்கிடந்து இருக்கிறார்கள் டி.டி.வி தினகரன் உள்ளிட்ட பல வி.ஐ.பி க்கள்.

மூக்குப்பொடி சித்தர்

மூக்குப் பொடி சித்தரின் பெயர் ஊர் எது வென்று தெரியவில்லை. இவர் கிரிவலப் பாதையில் எங்கு வேண்டுமானாலும் இருப்பார். இவரின் இந்த நிலையை அறிந்து பல பேர் இவரை நாடி வந்து ஆசி பெற்று சென்றுள்ளனர். இவரிடம் ஆசி பெற்று சென்றவர்கள் பல மடங்கு உயர்ந்து உள்ளார்கள் என்று அவர்களே வந்து லட்ச கணக்கில் பணம் அவரின் முன் வைத்துள்ளார்கள். ஆனால் அதனை எதுவுமே எடுத்துக்கொள்ளாமல் அங்கிருந்து எழுந்து சென்று விடுவார். உணவுக்கு யாரிடமாவது கையேந்துவார்.

சித்தர்

பண மதிப்பு இழப்பு ஆவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவரிடம் ஒரு பக்தர் 1000 ரூபாய் நோட்டுகளைக் கொடுக்க அவர் எதையோ சொல்லி கிழித்துப்போட்டார். அதன் பின்பு ஒரு வாரத்தில் பண மதிப்பிழப்பு ஆனது. இப்படி நாட்டில் நடப்பதை முன்பே அறிந்துகொள்ளக் கூடியவர் எனப் பக்தர்களால் நம்பப்படுகிறது. இவரின் புகழ் பல மடங்கு பரவிக்கிடக்கிறது. இவர் இன்று ஜீவசமாதி அடைந்தார் என்பது பல பக்தர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர். இப்போது மூக்குப் பொடி சித்தரின் உடல் சேஷாத்திரி ஆசிரமத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை அடக்கம் செய்யப்படும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க