கோலகலமாக நடந்து முடிந்த சுட்டி விகடன் விழா! | madurai chutti vikatan program finished in style

வெளியிடப்பட்ட நேரம்: 20:28 (09/12/2018)

கடைசி தொடர்பு:20:45 (09/12/2018)

கோலகலமாக நடந்து முடிந்த சுட்டி விகடன் விழா!

கோலகலமாக நடந்து முடிந்த சுட்டி விகடன் விழா!

 

சுட்டி விகடன் நடத்திய 'மதுரை 200' போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற பள்ளி மாணவ மாணவியருக்கான பரிசு வழங்கும் விழா மதுரைக் கல்லூரியில் நடைபெற்றது.

மதுரையின் 200 சிறப்புகள் குறித்தக் கேள்விகளுக்குச் சரியான பதிலளித்த மதுரையின் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி, மதுரைக் கல்லூரியில்  கோலாகளமாக  நடைபெற்றது. இந்த நிகழ்வில், மதுரை மாவட்டக் காவல் ஆணையர் டேவிட்சன் தேவஆசீர்வாதம், ரோட்டரி க்ளப்பின் மாவட்டத் தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், மதுரை மன்னர் கலைக்கல்லூரியின் இயக்குநர் திரு.ராஜா கோவிந்தசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். நிகழ்வில் 'அம்மா எலிசபெத் ஜெயசீலி' - தொண்டு நிறுவனத்தின் தலைவர் கிரம்மர் சுரேஷ் கலந்துகொண்டு உரையாற்றியபோது,``நானும் இந்தச் சுட்டிகளோடு இணைந்து சுட்டிக் குழந்தையாகத்தான் இங்கு வந்துள்ளேன்'' எனப் பேசி அரங்கத்தைக் கலகலப்பாக்கினார்.

விகடன்

மன்னர் கல்லூரி இயக்குநர் ராஜா கோவிந்தசாமி மேடையில் பாடி அசத்தி, மாணவர்களையும் பெற்றோரையும் உற்சாகப்படுத்தினார். காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பேசுகையில், ``பள்ளிப்பருவத்திலேயே குழந்தைகளைக் கண்காணித்து அவர்களின் போக்கினை சீர்செய்யவேண்டும். சாலைவிதிகள் உள்ளிட்ட அத்தனை அடிப்படை ஒழுங்குகளையும் கற்றுக்கொடுத்துப் பிள்ளைகளை வளர்க்கவேண்டும்’’ என்றார்.

சிறப்பு விருந்தினர்கள் மேடையில் மரியாதை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சிகள் தொடங்கின. போட்டியில் பங்குபெற்ற மாணவர்களை வகுப்புவாரியாகப் பிரித்து அவர்களுக்கு முதல் மூன்று பரிசுகள் என வழங்கப்பட்டன. பள்ளியின் சார்பாக மாணவர்களை ஊக்கப்படுத்திய ஆசிரியர்களுக்கும் மேடையில் பரிசளிக்கப்பட்டது.