`சாதியப் பற்று இருப்பதில் தவறில்லை' - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு! | minister pandiarajan controversy speech about casteism

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (10/12/2018)

கடைசி தொடர்பு:08:42 (10/12/2018)

`சாதியப் பற்று இருப்பதில் தவறில்லை' - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு!

சாதியப் பற்று இருப்பதில் தவறில்லை என அமைச்சர் மாஃபா கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை கோயம்பேட்டில் அகில இந்திய நாடார் பேரவை நடத்திய நாடார் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். அப்போது பேசியவர், ``எப்படி ஒவ்வொரு மனிதனுக்கு ஒரு மரபணு இருக்கிறதோ, அதேபோன்று ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு மரபணு இருக்கிறது. அந்த மரபணுவில் அந்த சமுதாயத்தில் அடையாளங்கள் ஊறி இருக்கிறது. சாதியப்பற்று இருப்பது தவறில்லை. சாதிய வெறிதான் இருக்கக்கூடாது.

அமைச்சர் பாண்டியராஜன்

இன்னொரு சாதியை காலி பண்ண வேண்டும் என்ற எண்ணம் இருக்கக் கூடாது. தனது சமுதாயம் வளர வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. உலகத்தில் எந்த நாட்டிலும் இது கிடையாது" என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். முன்னதாக காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``ஆதிமனிதன் வாழ்ந்த இடம் தமிழகம் என அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிரம்பாக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட கல் ஆயுதங்கள் 3 லட்சத்து 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆதிமனிதன் தமிழகத்தில் இருந்ததாகத் தெரியவந்துள்ளது. இந்தப் பொருள்களை வைக்க 4 அகழ் வைப்பகங்கள் உருவாக்கப்படும்" எனவும் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க