வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (10/12/2018)

கடைசி தொடர்பு:11:50 (10/12/2018)

வேலூர் சிறையில் இவ்வளவு மாத்திரை கிடைத்தது எப்படி?- உயிரை மாய்க்க முயன்ற கைதி

வேலூர் மத்திய சிறையில் கைதி அளவுக்கு அதிகமான மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மத்திய சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டையைச் சேர்ந்தவர் சின்னப்பையன் (49). இவர், குற்ற வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நள்ளிரவு சிறை அறையிலிருந்த சின்னப்பையன் தற்கொலை செய்து கொள்வதற்காக அளவுக்கு அதிகமான மாத்திரைகளைச் சாப்பிட்டுள்ளார். வாயில் நுரைதள்ளி மயங்கிக் கிடந்த சின்னப்பையனை சிறைத்துறையினர் மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சின்னப்பையன் தற்கொலைக்கு முயன்றது ஏன், அவருக்கு மாத்திரை கிடைத்தது எப்படி என்பது குறித்து பாகாயம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வேலூர் சிறையில் கைதிகள் உடல்நலக்குறைவால் உயிரிழப்பது தொடர்கிறது. குறிப்பாக, தண்டனைக் கைதிகள் அதிகம் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. சிறைக்குள் நடப்பது என்ன, கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக இருக்கிறதா என்பது குறித்து நீதிபதி அடங்கிய குழு ஆய்வு செய்ய வேண்டுமென மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.