நடிப்பு, பர்சனல் விஷயங்கள்!- 'நந்தினி' நித்யா ராம் சொல்லும் சுவாரஸ்யங்கள் | 'Nandini' serial heroine nithya ram talks about her career

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (10/12/2018)

கடைசி தொடர்பு:13:00 (10/12/2018)

நடிப்பு, பர்சனல் விஷயங்கள்!- 'நந்தினி' நித்யா ராம் சொல்லும் சுவாரஸ்யங்கள்

நித்யா ராம்

ன் டிவி 'நந்தினி' சீரியல் விரைவில் முடிவடைகிறது. இந்த சீரியலின் நாயகி நித்யா ராம் தன் நடிப்பு மற்றும் பர்சனல் விஷயங்கள் குறித்து சுவாரஸ்யமாகப் பேசுகிறார். 

`` `நந்தினி' சீரியல் ஷூட்டிங் இந்த வாரத்தோடும், இந்த சீரியல் டி.வியில ஒளிபரப்பாவது அடுத்த வாரத்தோடும் முடியுது. முன்பு, பெங்களூருவில் சினிமா, சீரியல்னு நடிச்சுகிட்டு இருந்தேன். அப்போகூட எனக்கு இவ்வளவு பெரிய வரவேற்பும் புகழும் கிடைக்கலை. ஆனா, `நந்தினி' சீரியல்ல நடிக்க ஆரம்பிச்ச பிறகு, நாலு தென்னிந்திய மொழிகளிலும் நல்ல புகழ் கிடைச்சுது. `நந்தினி' சீரியலுக்கு மக்கள் பெரிய ஆதரவு கொடுத்தாங்க. ரெண்டு வருஷ `நந்தினி' பயணத்துல காமெடி, எமோஷனல்னு நிறைய மெமரீஸ் கிடைச்சுது. ஒரே நாள்ல, நந்தினி, கங்கானு ரெண்டு கெட்டப்ல மாறி மாறி நடிச்சதால, கொஞ்சம் சிரமப்பட்டேன். ஆனா, எனக்குக் கிடைச்ச புகழலாலும், மக்களின் அன்பாலும் சிரமங்கள் எதுவுமே பெரிசா தெரியலை. இப்போ, ஒட்டுமொத்த டீமையும் மிஸ் பண்றேன். ஆனா, தமிழ்நாட்டு ரசிகர்களைவிட்டு அவ்வளவு சீக்கிரம் போக மாட்டேன். அடுத்து, 'நந்தினி'யைவிட பெரிய புராஜெக்ட்ல நடிக்கணும்னு முடிவெடுத்திருக்கிறேன்" என்கிறார்.

நித்யா ராம்

தன் பர்சனல் லைஃப் குறித்து பேசும்போது, ``முன்பு, 'நந்தினி' கேரக்டர் மாதிரி அடிக்கடி கோபப்படுவேன். இப்போ `கங்கா' மாதிரி ரொம்ப அமைதியான கேரக்டரா மாறிவிட்டு வர்றேன். ஆக்டிங் தவிர, டான்ஸ்ல அதிக ஆர்வம் உண்டு. வெரைட்டியான மேக்கப், டப்ஸ்மாஷ், டிக் டாக்லயும் கவனம் செலுத்துவேன். சைவம், அசைவம்னு பிடிச்ச உணவுகளை அருமையா சமைச்சு திருப்தியா சாப்பிடுறது என் வழக்கம். அதேசமயம் உடல் எடை கன்ட்ரோல்ல இருக்கும்படி பார்த்துப்பேன்.

ஓய்வுநேரம் கிடைச்சா, நாள் முழுக்கக்கூட தூங்குவேன்; தூக்கம் ரொம்பப் பிடிக்கும். தவிர, நல்ல மியூசிக் மற்றும் பிடிச்ச பாடகர்களின் பாடல்களை அடிக்கடி கேட்டு ரசிப்பேன். இந்த மூணு விஷயங்களும்தான் என் மகிழ்ச்சிக்குக் காரணம். அதனாலதான், 'நீங்க எப்போதும் சந்தோஷமாகவே இருக்கீங்க'னு பலரும் என்னைக் கேட்கிறாங்க. நீங்களும் இதையெல்லாம் கடைபிடிச்சா, ஹேப்பியா இருக்கலாம்; உங்க வேலையில நல்லா கவனம் செலுத்தலாம்" என்று புன்னகைக்கிறார், நித்யா ராம்.