`இடைத்தேர்தலை தள்ளிப்போட அவசியம் இல்லை!’ உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு | madurai high court about Byelection

வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (10/12/2018)

கடைசி தொடர்பு:15:55 (10/12/2018)

`இடைத்தேர்தலை தள்ளிப்போட அவசியம் இல்லை!’ உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தடை இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 

ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், ``தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.,க்களையும் சபாநாயகர் தகுதியிழப்பு செய்தார். இதை எதிர்த்து 18 பேரும் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் 18 பேரவை தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தினால் கோடிக்கணக்கான மக்கள் வரிப்பணம் வீணாகச் செலவிடப்படும். எனவே, காலியாக அறிவிக்கப்பட்டுள்ள 18 தொகுதிகளில் கடந்த பேரவை தேர்தலின் போது தேர்தலுக்காகச் செலவிட்ட பணத்தை தகுதியிழப்பு செய்யப்பட்ட 18 பேரிடம் வசூலித்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செலவிட உத்தரவிட வேண்டும். அதுவரை 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும்"என மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ் வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல் ஏக்கள், இந்தியத் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு இடைத்தேர்தலை நடத்த ஒருபோதும் இடையூறாக அமையாது எனவும், இதைக் காரணம் காட்டி இடைத்தேர்தலை தள்ளிப்போட தேவையில்லை எனவும் தெரிவித்து வழக்கை ஜனவரி 4 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.