`சொத்தை அபகரிச்சுக்கிட்டாங்க மீட்டுக்கொடுங்க!’ - மகன்கள் மீது புகாரளித்த வயதான தம்பதி | Parents files complaint with cuddalore district collector against their sons

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (10/12/2018)

கடைசி தொடர்பு:21:40 (10/12/2018)

`சொத்தை அபகரிச்சுக்கிட்டாங்க மீட்டுக்கொடுங்க!’ - மகன்கள் மீது புகாரளித்த வயதான தம்பதி

தம்பதிகளுக்கு ரூ 80 லட்சம் மதிப்பில் இரண்டு மாடி வீடுகள் உள்ளது. அதனை மகன்களுக்கு பிரித்து கொடுத்துள்ளனர், ஆனால் வீட்டின் சொத்து பத்திரம் தம்பதிகள் பெயரிலேயே இருந்து வந்துள்ளது. மகன்கள் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் அவர்கள் பெயரில் மாற்றி எழுதி சொத்தை அபகரித்துக்கொண்டதாக கூறப்படுகிறது

கிருஷ்ணமூர்த்தி - கொளஞ்சி தம்பதியினர்

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி - கொளஞ்சி தம்பதிகள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், இவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துவைத்தனர். அதே பகுதியில் தம்பதிகளுக்கு ரூ.80 லட்சம் மதிப்பில் இரண்டு மாடி வீடுகள் உள்ளன. அதை மகன்களுக்குப் பிரித்துக் கொடுத்துள்ளனர். ஆனால், வீட்டின் சொத்துப் பத்திரம் தம்பதிகள் பெயரிலேயே இருந்துவந்துள்ளது.

மகன்கள் இருவரும் பெற்றோருக்குத் தெரியாமல் அவர்கள் பெயரில் மாற்றிஎழுதி, சொத்தை அபகரித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், பெற்றோருக்கு இரு மகன்களும் மாதம்தோறும் செலவுக்கு 2 ஆயிரம் ரூபாய்  தருவதாக உறுதி கூறியுள்ளனர். வீடுகளை மகன்கள் அபகரித்துக்கொண்டதால், தம்பதிகள் வீட்டை விட்டு வெளியேறி, வாடகை வீட்டில் வசித்துவந்தனர். இந்நிலையில், தம்பதிகள்
தங்கள் சொத்துகளை மகன்கள் அபகரித்துக்கொண்டதால் மிகவும் சிரமப்படுவதாகவும், மகன்கள் தருவதாகக் கூறிய 2 ஆயிரம் ரூபாயும் தரவில்லை எனக் கூறி, தங்களுக்கு உரிய நியாயமும், வாழ்வாதாரத்திற்கான ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனக் கோரி, மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வனிடம் புகார் மனு கொடுத்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன், அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.