வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (10/12/2018)

கடைசி தொடர்பு:20:40 (10/12/2018)

`அதிகாரிகள் அலைக்கழிக்கிறாங்க!’ - விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபர்

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்  மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றவரை

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றவரை காவல் துறையினர் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தீக்குளிக்க முயன்ற முருகேசன்

 விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில், இன்று காலை முதல் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்துகொண்டிருந்தது. அப்போது, தன்னை அதிகாரிகள் அலைக்கழிக்கிறார்கள் என்று கூறிக்கொண்டு, அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர், தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய்யைத் தன் உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார். உடனே, அங்கிருந்த காவல் துறையினர் வேகமாக வந்து அவரை தடுத்து, அவர் உடலில் தண்ணீரை ஊற்றி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

தீக்குளிக்க முயன்ற முருகேசன்

 

ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று முருகேசனிடம் அதிகாரிகள் விசாரித்ததற்கு, கன்னிசேரிப்புதூரில் இருக்கும் தன்னுடைய நிலத்தை வைத்து வங்கிக் கடன் வாங்க அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ அடங்கல் தர மறுக்கிறார். அதனால், தற்கொலைக்கு முயன்றதாகக் கூறியுள்ளார்.  அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டுத் தீர்வு கிடைக்காமல் தற்கொலை செய்துகொள்ள, பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வருவது அதிகரித்துவருகிறது. ஏற்கெனவே, இதுபோன்ற தற்கொலைக்கு பலர் முயன்ற சம்பவங்கள் இங்கு நடந்துள்ளன.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க