`பினராயி விஜயன் தமிழகம் வரக்கூடாது!’ - கலெக்டரிடம் மனு கொடுத்த இந்து அமைப்பு | 'Pinarayi Vijayan not come to Tamilnadu!' - The Hindu system that warned the collector

வெளியிடப்பட்ட நேரம்: 23:50 (10/12/2018)

கடைசி தொடர்பு:06:56 (11/12/2018)

`பினராயி விஜயன் தமிழகம் வரக்கூடாது!’ - கலெக்டரிடம் மனு கொடுத்த இந்து அமைப்பு

`சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள வரும் கேரள முதல்வர் பினராயி விஜயனைத் தமிழகத்துக்குள் நுழைய விடக்கூடாது’ என்று கலெக்டரிடம் இந்து அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.

பினராயி விஜயன்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து புதிய குடும்ப அட்டை,  வேலைவாய்ப்பு, கடனுதவி, நிதியுதவி, இலவச வீட்டுமனைப் பட்டா, காவல்துறை பாதுகாப்பு மற்றும் பொதுநல மனுக்கள் என 447 மனுக்களை பெற்றுக்கொண்டார். சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராஜகோபால் குருஜி தலைமையில் கொடுக்கப்பட்ட மனுவில், ``சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பைத் தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

சபரிமலை

சரண கோஷம் எழுப்பினால் வழக்கு பதிவு, 144 தடை உத்தரவு எனப் பலவிதமான அநீதிகள் பினராயி விஜயன் அரசால் இழைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வரும் 16-ம் தேதி கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் பினராயி விஜயன் கலந்துகொள்வதாகச் செய்திகள் வந்துள்ளன. கம்யூனிஸ்ட் அரசின் முதல்வரான பினராயி விஜயனைத் தமிழகத்துக்குள் நுழையவிடக்கூடாது’’ என்று கூறியிருந்தனர்.