வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (11/12/2018)

கடைசி தொடர்பு:14:00 (11/12/2018)

பா.ஜ.க தோல்விக்கு என்ன காரணம்? - அலசும் ராமசுப்ரமணியன்

இன்று வெளிவந்து கொண்டிருக்கும் 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து அரசியல் விமர்சகர் ராமசுப்பிரமணியன் என்ன சொல்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளும் விதமாக அவரிடம் பேசினேன். 

மோடி

``தோல்விக்குக் காரணம் என்னன்னு, என் மனசுல இருக்கிறத சொல்லிடுறேன். எனக்கு எப்பவும் அப்படி பேசித்தான் பழக்கம். முதல் விஷயம் காங்கிரஸ் முக்தி அடைஞ்சிடும்னு பா.ஜ.க பேசுனாங்க. அது இல்லைன்னு இந்தத் தேர்தல் முடிவு சொல்லி இருக்கு. காங்கிரஸ் பெரிய சக்தின்னு நிரூபணம் ஆகியிருக்கு. 

ராமசுப்பு

இங்க இன்னொரு விஷயமும் குறிப்பிட்டுச் சொல்லணும். ராஜஸ்தானில் பா.ஜ.க படுதோல்வி அடையும்ங்கிறதுதான் பலரோட கணிப்பா இருந்தது. ஆனா, அது நடக்கல. காரணம், பிரதமர் மோடிதான். ராஜஸ்தானில் பிரதமர் மோடி செய்த வலுவான பிரசாரமே அங்கே படுதோல்விக்கு வாய்ப்பு இல்லாமல் போனது ஒரு ஆறுதலான விஷயம்.

பொதுவாக பா.ஜ.க.வோட இந்த சரிவுக்கு காரணங்களாக நான் பாக்குறது. அவங்க எடுத்த அதிரடியான முடிவுகள். அது விவசாயிங்களை, சிறு, குறுதொழில் செய்பவர்களைன்னு பலபேரை பாதிச்சு இருக்குங்கிறதுக்கு அடையாளங்களாகத்தான் இந்த முடிவுகளை எடுத்துக்க வேண்டி இருக்கு. 

வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல்கள்ல பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்கறதுங்கிறது ரொம்ப சவாலான விஷயம். ராகுல் காந்தி பக்கம் கூட்டணி வலிமையாகுற மாதிரி இருக்கு. பா.ஜ.க இன்னும் உத்வேகமாக செயல்படணும்'' என்றார்.