டெல்டா விவசாயிகள் சிரமப்படுவது கஷ்டமா இருக்கு! - திருநங்கைகள் பிரார்த்தனை | Delta farmers have difficulties in difficulty - pray for transgender back to normal

வெளியிடப்பட்ட நேரம்: 02:48 (12/12/2018)

கடைசி தொடர்பு:07:24 (12/12/2018)

டெல்டா விவசாயிகள் சிரமப்படுவது கஷ்டமா இருக்கு! - திருநங்கைகள் பிரார்த்தனை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதற்காக,தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில், புதுக்கோட்டையில் சிறப்பு பூஜைகள் மற்றும் கூட்டுப் பிரார்த்தனை நடத்தப்பட்டது.

திருநங்கைகள்


கஜா புயல் பாதிப்பால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கஜா புயல் கரையைக் கடந்து 20 நாள்களுக்கு மேல் ஆகியும், பெரும்பாலான கிராம மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் பரிதவித்து வருகின்றனர். இந்த நிலையில், தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் சார்பில், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில், 32 மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஒரே இடத்தில் கூடி கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

கஜா புயல்

தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் தலைவர் மோகனாவிடம் பேசினோம், ‘கஜா புயலால், பாதிக்கப்பட்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்படுவது எங்களுக்கு வேதனையாக உள்ளது.

திருநங்கைகள்

புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களின் கஷ்டங்கள் நீங்கி, விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்று எங்கள் தெய்வங்களுக்கு பூஜைகள் செய்கிறோம். எங்களது கூட்டுப் பிரார்த்தனையால் நிச்சயம் பலன் அளிக்கும். விரைவில் டெல்டா மாவட்ட மக்கள் பழைய நிலைக்குத் திரும்புவார்கள் என்று நம்புகிறோம். விவசாயிகள், பொதுமக்கள் சந்தோஷமாக இருந்தால், தான் நாங்களும் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும்’ என்றார்.