`சக மாணவருக்கு ஹேப்பி பர்த்டே!’ - ரஜினிக்கு வாழ்த்துச் சொன்ன முக்கிய நண்பர்கள் | Rajinikanth celebrating his 69th birthday 

வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (12/12/2018)

கடைசி தொடர்பு:08:37 (12/12/2018)

`சக மாணவருக்கு ஹேப்பி பர்த்டே!’ - ரஜினிக்கு வாழ்த்துச் சொன்ன முக்கிய நண்பர்கள்

rajini

நடிகர் ரஜினிகாந்தின் 69-வது பிறந்தநாள் இன்று.  `பேட்ட’ படத்தின் பாடல்கள் ஹிட் அடித்த குஷியில் இருக்கிறது படக்குழு. படத்தில் ரஜினியின் கெட் - அப் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. `பேட்ட' படத்தின் புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்கள் ரஜினிக்குப் பிறந்தநாள் வாழ்த்து கூறிவருகின்றனர். இன்று காலை 11 மணிக்கு ரஜினியின் பிறந்தநாள் ட்ரீட்டாக பர்த்டே டீசரை வெளியிட உள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

பேட்ட

மேலும், ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் மனைவி லதா, சென்னையில் குழந்தைகள் பாதுகாப்பு அறக்கட்டளையின், மொபைல் போன் செயலியை வெளியிடுகிறார். 

rajini

Image tweeted by Amitabh bachchan


ரஜினிகாந்துக்கு கமல்ஹாசன் ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். `என் பல ஆண்டு நண்பர், சக மாணவர், சூப்பர் ஸ்டாருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.  பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தன் ட்விட்டர் பக்கத்தில் `என் நண்பருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்’ என தமிழில் பதிவிட்டு சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க