வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (12/12/2018)

கடைசி தொடர்பு:13:20 (12/12/2018)

`கடற்கரைக்குப் போனாலே போலீஸ் சந்தேகிக்கிறது! - திருமுருகன் காந்தி வேதனை

மிழகத்தின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு எதிராக களத்தில் நிற்பவர் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி. மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகள் குறித்து சர்வதேச அளவிலும், தனது குரலை அழுத்தமாகப் பதிவு செய்பவர். கைது, வழக்கு, சிறை, குண்டாஸ் என பல நெருக்கடிகளை எதிர்கொண்ட அவர், மன அழுத்தங்களிலிருந்து எப்படி மீண்டு வருகிறார். அவரிடம் பேசினோம்.

திருமுருகன் காந்தி

``எனக்குச் சொந்த பிரச்னைகளால் மனஅழுத்தம் வந்ததில்லை. மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளைக் கையிலெடுக்கும்போது, நெருக்கடிகளும் மனஅழுத்தமும் ஏற்படும். அதற்காக முடங்கிவிடாமல், வேறு திசையில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவேன். பிரச்னை வந்துவிட்டதே என்று முடங்கிப் போவதால் அது தீரப்போவதில்லை. கடுமையான மனஅழுத்தம் இருந்தாலும் அதிலிருந்து நமது சிந்தனையை மாற்றினால் போதும்; அது நம்மைத் துரத்தாது. முன்பெல்லாம் அதிக மன அழுத்தம் இருக்கும்போது கடற்கரைப்பக்கமாக போய் உட்கார்ந்துவிடுவேன்.

திருமுருகன் காந்தி

குறிப்பாக மெரினாதான் எனக்கு மனஅழுத்தம் நீக்கும் மருந்து. அங்கு போய் உட்கார்ந்து, அதன் பிரமாண்டத்தை ரசிப்பேன். இப்போது அந்த பக்கம் போனால் அரசுக்கு மன அழுத்தம் வந்துவிடுகிறது. கடற்கரைப் பக்கம் போனாலே காவல்துறை சந்தேகிக்கிறது, பின்தொடர்கிறது. அதனால், இப்போதெல்லாம் மன அழுத்தம் ஏற்படும்போது, வாக்கிங் போவேன், பிடித்தமானப் புத்தகங்கள் வாசிப்பது, பாடல் கேட்பது, வீட்டில் இருந்தால் குழந்தைகளிடம் பேசுவது அல்லது அவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்ப்பது... இப்படிதான் மன அழுத்தத்தை எதிர்கொள்கிறேன்" என்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க