மணமகன் நண்பரின் செயலால் எரிச்சலான வைகோ! - திருமண விழாவில் பரபரப்பு | Vaiko hit the groom's friend in wedding ceremony

வெளியிடப்பட்ட நேரம்: 18:01 (12/12/2018)

கடைசி தொடர்பு:18:09 (12/12/2018)

மணமகன் நண்பரின் செயலால் எரிச்சலான வைகோ! - திருமண விழாவில் பரபரப்பு

ஆண்டிபட்டியில் திருமண விழாவில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவை மணமகனின் நண்பர் ஒருவர் எரிச்சலூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வைகோ கோபம்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் இன்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் கார் ஓட்டுநர் பொன்னாங்கன் மகள் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமண விழாவுக்கு வருகை தந்த வைகோ, திருமாங்கல்யம் எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். தாலி கட்டும் வேளையில் மணமகனின் நண்பர்கள் மேடையில் விசில் அடித்தும் ஸ்பிரே அடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அந்த ஸ்பிரே, வைகோ மீது படவே அவர் சட்டென கோபமடைந்தார்.

வைகோ

எதிரே இருந்த மணமகனின் நண்பர் கையில் இருந்த வண்ண காகித வெடி டப்பாவை பிடுங்கி வீசினார் வைகோ. இதைக் கண்டு அருகில் இருந்தவர்கள், வைகோவை தடுத்து சமாதானம் செய்தனர். அப்போதும் கோபம் குறையாத அவர், மேடையில் நின்றிருந்த மணமகனின் நண்பர்களைத் திட்டினார். தொடர்ந்து மணமகனின் நண்பர்கள் மேடையைவிட்டு கீழே  இறங்கினர். இச்சம்பவம், திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது. ``தன் நண்பனின் திருமணத்தைக் கொண்டாடவே அப்படிச் செய்தனர். அவர்களை அழைத்து அறிவுரை கூறியிருக்கலாம்" என்றனர் திருமணத்துக்கு வந்திருந்தவர்கள்.