ஒன்றரை வயதுக் குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த கர்ப்பிணி - கோவையில் சோகம்! | Pregnant woman suicide in coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (12/12/2018)

கடைசி தொடர்பு:20:30 (12/12/2018)

ஒன்றரை வயதுக் குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த கர்ப்பிணி - கோவையில் சோகம்!

குடும்பப் பிரச்னை காரணமாக கோவையில் நிறைமாத கர்ப்பிணி, தனது ஒன்றரை வயது குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பப் பிரச்னை காரணமாகக் கோவையில் நிறைமாத கர்ப்பிணி, தன் ஒன்றரை வயதுக் குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை

கோவை சின்னியம்பாளையம் அருகே உள்ள கருப்பராயன் பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரின் மகள் மகேஷ்வரி (27) கட்டட வேலை செய்து வருகிறார். இவருக்கும் சின்னத்தடாகத்தைச் சேர்ந்த தனபால் (32) என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யுவன் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை இருக்கிறது. மேலும், மகேஷ்வரி தற்போது நிறை மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இதையடுத்து, இன்று மதியம் 2.30 மணியளவில், ரத்தினபுரி அருகே மகேஷ்வரி தன் ஒன்றரை வயதுக் குழந்தையுடன் ரயில்வே பாதை அருகே வந்துள்ளார். அப்போது அங்கே வந்த ரயில் முன்பு, தன் குழந்தையுடன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இதில், மகேஷ்வரி மற்றும் யுவன் உடல் இரண்டாக வெட்டப்பட்டு ரயில்வே தண்டவாளம் அருகே கிடந்தது. குறிப்பாக, வயிற்றில் இருந்த பச்சிளம் குழந்தை ரயில் மோதி, வெளியே வந்து இறந்துள்ளது. இறந்த போனதும் ஆண் பச்சிளம் குழந்தை எனத்தெரிய வந்துள்ளது.

காலை 11 மணியளவில் வீட்டைவிட்டு வெளியில் வந்த மகேஷ்வரி, தன் சகோதரி யசோதாவுக்கு செல்போனில் அழைத்து, நகைகளைக் கழற்றி வீட்டில் வைத்து வந்துவிட்டேன். அவற்றை நீ எடுத்துக்கொள். என்னை யாரும் தேட வேண்டாம் என்று கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.