கஜா புயல் விகடன் செய்தி எதிரொலி - கழுமங்குடா கிராமத்துக்கு உதவிய வாசகர்! | Kazhumanguda village gets help as a result of Vikatan's news

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (12/12/2018)

கடைசி தொடர்பு:20:40 (12/12/2018)

கஜா புயல் விகடன் செய்தி எதிரொலி - கழுமங்குடா கிராமத்துக்கு உதவிய வாசகர்!

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள கழுமங்குடா மற்றும் காரகுடா மீனவ கிராமங்கள் கஜா  புயலால் பலத்த சேதமடைந்திருக்கின்றன. அவர்களது வீடுகள் முழுவதுமாக சேதமடைந்திருந்தது. பகலில் உடைந்த வீடுகளுக்கு வெளியிலும், இரவில் அங்கிருக்கிற பள்ளிக் கூடங்களிலும் தங்கியிருக்கிறார்கள். குழந்தைகளை வைத்துக்கொண்டு கடும் வெயிலில் உடைந்த வீடுகளுக்கு வெளியே சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை எதுவும் கிடைக்காத மக்கள் எங்களுக்கு தார்ப்பாய் கிடைத்தால் போதும் நாங்கள் எப்படியாவது சமாளித்துக்கொள்கிறோம் எனச் சொல்லியிருந்தார்கள். 

கஜா புயல் உதவி கிடைத்த கிராமம்


இது வரை  எந்த நிவாரண உதவிகளும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதைக் கள ஆய்வு செய்து நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். இந்தச் செய்தியை படித்த துபாயில் பணி புரியும் ஓசூரை சேர்ந்த செந்தில் என்கிற வாசகர் பாதிக்கப்பட்ட  கிராமங்களுக்கு உதவுவதாகத் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று அந்தக் கிராமங்களுக்குத் தேவையான “தார்பாய், உடைகள், அரிசி போன்ற அத்தியாவசியப் பொருள்களை நண்பர்கள் துணைகொண்டு ஓசூரிலிருந்து கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். உதவிய நல்ல உள்ளங்களுக்கு கிராம மக்கள் மனதார நன்றி தெரிவித்தார்கள்.