7 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - திருப்பூரைச் சேர்ந்த முதியவர் கைது | 7 years old children sexually harassed by old men

வெளியிடப்பட்ட நேரம்: 23:27 (12/12/2018)

கடைசி தொடர்பு:07:08 (13/12/2018)

7 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - திருப்பூரைச் சேர்ந்த முதியவர் கைது

திருப்பூர் அருகே 7 வயது பெண் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட முதியவரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

பாலியல் துன்புறித்தலில் ஈடுபட்ட முதியவர்

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் கட்டுமான தொழிலாளி ஹனிபா. 62 வயதான இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இவர் தற்போது தன் 2 -வது மனைவி ரூபியாவுடன் தனியாக வசித்து வருக்கிறார். இந்த நிலையில் நேற்று ஹனிபா, தன் வீட்டுக்கு அருகே பாட்டியுடன் தனியாக வசித்து வரும் 8 வயது சிறுமி ஒருவரை அவர் தனியாக உள்ள நேரம் பார்த்து தன்னுடைய வீட்டின் மாடிப் பகுதிக்குக் கூட்டிச் சென்றிருக்கிறார். இதைக்கண்ட அப்பகுதியில் வசிக்கும் பெண்மணி ஒருவர், நடந்த சம்பவம் குறித்து அந்தச் சிறுமியின் பாட்டியிடம் சென்று சொல்லியிருக்கிறார். அதைத்தொடர்ந்து அச்சிறுமியை அழைத்து பாட்டி விசாரித்தபோது, முதியவர் ஹனிபா அச்சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.

பின்னர் சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் தரப்பில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து புகார் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், முதியவர் ஹனீபாமீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் முதியவர் ஹனிபா.