``மக்களின் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி! | edappadi palanichami speaks about five state election result

வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (13/12/2018)

கடைசி தொடர்பு:07:20 (13/12/2018)

``மக்களின் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமி

5 மாநில தேர்தலில் மக்களின் முடிவைக் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தேர்தலில் பின்னடைவு முன்னடைவு என்று பேச்சில்லை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

 கோவை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``கஜா புயல் குறித்து ஏற்கெனவே தமிழக அரசு பிரதமரிடம் கடிதம் கொடுத்துள்ளது. மத்திய அரசு கூடுதல் விளக்கம் கேட்டிருந்தனர். அது இன்று அனுப்பபட்டுள்ளது. மேலும் 15,000 கோடி நிவாரணம் கேட்டுள்ளோம். மத்திய அரசு எவ்வளவு கொடுக்கின்றது என பார்க்கலாம்?

5 மாநில தேர்தல் முடிவில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். 5 மாநில தேர்தலில் பின்னடைவு முன்னடைவு என்ற பேச்சில்லை. வாக்குகளில் பெரிய வித்தியாசமில்லை. ஆயிரம் வாக்குகளில் கூட வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாநிலத்தின் பிரச்னை அடிப்படையில் தேர்தல் முடிவுகள் வந்திருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தைப் பொறுத்தவரை கழகங்களின் ஆட்சிதான் நடைபெறும். கர்நாடகா ஒவ்வொரு அணை கட்டும்போதும் நாம் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம். கர்நாடகாவில் தொடர்ந்து அணைகள் கட்டுவதால் தமிழகம் பாலைவனமாக காட்சியளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடக அரசு காவிரி  தீர்ப்பை மதித்து நடப்பதில்லை.  கர்நாடக அரசு காவிரி தீர்ப்பை மதித்து நடந்துள்ளது என்ற வரலாறே கிடையாது. மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு தண்ணீர் வராது. தமிழகம் பாலைவனம் ஆகிவிடும். 

கிருஷ்ணசாகர் அணையிலிருந்து பெங்களூருக்கு தண்ணீர் அளிக்க முடியும். ஆனால், பெங்களூரு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற போர்வையில் மேக்கே தாட்டூவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கின்றது. பிப்ரவரி இறுதியில், கோவை மாநகரத்தில்  போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக சுங்கம் - ராமநாதபுரம் சந்திப்பு இடையே 3.6 கீ.மீ தூரத்துக்கு 213 கோடியில் மேம்பாலம் கட்டப்படும். அதேபோல கோவை கவுண்டம்பாளையம் சந்திப்பில் ஒரு கீ.மி தூரத்துக்கு 60 கோடி மதிப்பில் பாலமும்,
கோவை ஜி.என்.மில் சந்திப்பில் 50 கோடி மதிப்பீட்டில் ஒரு பாலமும் கட்டப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க