பொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்குத் தடைவிதிக்க முடியாது! - உச்சநீதிமன்றம் | supreme court action in pon manickavel extension issue

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (13/12/2018)

கடைசி தொடர்பு:13:00 (13/12/2018)

பொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்குத் தடைவிதிக்க முடியாது! - உச்சநீதிமன்றம்

பொன்.மாணிக்கவேலின் பணிநீட்டிப்பை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றிவந்த பொன்.மாணிக்கவேல் கடந்த நவம்பர் 30-ம் தேதி ஓய்வு பெற்றார். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றுவது குறித்த வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.

பொன் மாணிக்கவேல்

அதேநாளில், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த மற்றொரு மனுவில், பொன்.மாணிக்கவேலை மறுநியமனம் செய்து, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாக நியமித்தது சென்னை உயர்நீதிமன்றம். பொன்.மாணிக்கவேல் ஓய்வுபெற்றதையடுத்து, சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவுக்கு அபய்குமார் சிங்கை ஏ.டி.ஜி.பி-யாக நியமித்து உத்தரவிட்டது தமிழக அரசு. 

இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடியது தமிழக அரசு. பொன்.மாணிக்கவேலின் பணிநீட்டிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பொன்.மாணிக்கவேலின் பணிநீட்டிப்புக்குத் தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். இந்நிலையில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரியாகப் பொன்.மாணிக்கவேல் தொடர்வார் என்பதில் சந்தேகமில்லை.