`வைகோ போராளிதான்; ஆனால், அவருக்கு நேரம் சரியில்லை!'- ராஜேந்திர பாலாஜி கிண்டல் | Rajendra Balaji teases vaiko

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (13/12/2018)

கடைசி தொடர்பு:16:20 (13/12/2018)

`வைகோ போராளிதான்; ஆனால், அவருக்கு நேரம் சரியில்லை!'- ராஜேந்திர பாலாஜி கிண்டல்

"வைகோ ஒரு போராளிதான். ஆனால், அவருக்கு இப்போது நேரம் சரி இல்லை" என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிண்டல் செய்துள்ளார்.

ராஜேந்திர பாலாஜி

ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு இன்று வந்த  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஆட்சியில் இருப்பவர்கள் மீது மக்கள் அதிருப்தி அடைவார்கள். அதிருப்தி இல்லாமல் ஆட்சியைக் கொண்டுசெல்ல வேண்டும்.  பா.ஜ.க இதை ஒரு பாடமாக எடுத்துத்துக் கொள்ள வேண்டும். செய்த தவற்றை  திருத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான், அடுத்த தேர்தலில் நல்ல ரிசல்ட் கிடைக்கும். பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லை. திராவிட இயக்கங்கள்தான் தமிழகத்தை ஆளும்.

கஜா புயல் குறித்து தமிழக அரசு அறிக்கை கொடுக்கவில்லை என மத்திய அரசு கூறுவது தப்பித்துக்கொள்ளும் செயல். அது தவறானது. அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து சென்றவர்கள் யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என முதல்வர் தெரிவித்துள்ளார். ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, முன்பு சென்ற இடமெல்லாம் சிறப்பாக இருந்தது. தற்போது, சென்ற இடமெல்லாம் பிரச்னையாக உள்ளது. வைகோ ஒரு போராளிதான். ஆனால், அவருக்கு நேரம் சரி இல்லாததால் சிக்கலில் உள்ளார்.

வைகோ

 சட்டமன்ற இடைத்தேர்தல் 20 தொகுதிகள் மற்றும்  40 நாடாளுமன்றத் தொகுதிகள் அனைத்திலும் அ.தி.மு.க வெற்றிபெறும். கருணாநிதி சிலை திறப்புவிழாவுக்கு அழைப்பு வந்ததாகத் தெரியவில்லை. வந்தால், செல்வது குறித்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் முடிவு எடுப்பார்கள்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க