வெளியிடப்பட்ட நேரம்: 19:41 (13/12/2018)

கடைசி தொடர்பு:19:41 (13/12/2018)

“அடிமைபோல நடத்தப்பட்டோம்!’’ - பெண்காவலர்கள் புகாரால் ஏ.டி.ஜி.பி-க்கு நோட்டீஸ்!

காஞ்சிபுரம் காவல் பயிற்சி மையத்தில் உயர் அதிகாரிகள் தங்களை அடிமைபோல நடத்துவதாகப் பெண் காவலர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கூடுதல் டி.ஜி.பி விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காவலர்கள்

காஞ்சிபுரத்தில் உள்ள காவலர் பயிற்சி மையத்தில் கடந்த வருடம் சுமார் 180 பெண் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பெரும்பாலானவர்கள் பட்டப்படிப்பு முடித்து வந்தவர்கள். காவல்துறை பயிற்சி என்பதால் அங்கே கடுமையான பயிற்சி இருக்கும். பட்டதாரி பெண்கள் அந்த அளவுகுக் கடுமையான பயிற்சிகள் இருக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை. மேலும் அங்கு உணவு, கழிவறை போன்ற வசதிகள் சரியாக செய்து கொடுக்கப்படவில்லை எனப் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் கூறிவந்திருக்கிறார்கள். பயிற்சி பெறும் காவலர்கள் புகார் அளிக்கும் வகையில் பயிற்சி மையக் கட்டடத்தின் இரண்டு அடுக்கிலும் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டன. ஆனால், அவர்கள் அப்போது புகார் எதையும் அந்தப் பெட்டியில் போடவில்லை. கடந்த வருடம் பயிற்சியை முடித்த பெண்கள் ஆயுதப் படைக்கு சென்றுவிட்டார்கள். “பயிற்சியின்போது தங்களுக்குக் குறிப்பிட்ட வசதிகள் செய்து கொடுக்கவில்லை. நாங்கள் அடிமைகளைப்போல நடத்தப்பட்டோம். ஆகவே, அதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனித உரிமை ஆணையத்திடம் பெண் காவலர்கள் சிலர் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் கூடுதல் டி.ஜி.பி-க்கு மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க