மதுரையில் நடைபெற்ற சீமான் மைத்துனர் திருமணம்! | Seeman brother-in-law marriage held in Madurai

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (14/12/2018)

கடைசி தொடர்பு:00:00 (14/12/2018)

மதுரையில் நடைபெற்ற சீமான் மைத்துனர் திருமணம்!

நாம் தமிழர் கட்சியின் நிறுவனரும், திரைப்பட இயக்குநருமான சீமான் மைத்துனரான வழக்கறிஞர்  அருள்மொழித்தேவனுக்கு இன்று மதுரையில் திருமணம் நடைபெற்றது. இதில் அரசியல் பிரமுகர்களும், திரைத்துறையைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

சீமான் மைத்துனர் திருமணத்தின்போது

நாம் தமிழர் கட்சியின் நிறுவனரான சீமானின் மைத்துனரும், மறைந்த அமைச்சரும் சபாநாயகருமான காளிமுத்து - மனோகரி இணையரின்  மகன் வழக்கறிஞர் அருள்மொழித்தேவனுக்கும், பொறியாளர் மீனாம்பிகைக்கும் மதுரையில் இன்று திருமணம் நடைபெற்றது. மதுரை லட்சுமி சுந்தரம் அரங்கத்தில் நடைபெற்ற இந்தத் திருமண விழாவில், மாநிலம் முழுவதுமிருந்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மூத்த தலைவர் குணங்குடி அனீபா, நடிகர் வடிவேலு உட்பட திரையுலகைச் சேர்ந்த பலரும் இதில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். சீமான் மனைவியின் சகோதரர்தான் மணமகன் என்பதால் இத்திருமணத்தை அவரே முன்னின்று  நடத்தினார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க