செந்தில் பாலாஜி தி.மு.க-வில் இணைவது ஏன்? - காரணத்தைக் கூறும் ஈ.வி.கே.எஸ் | Illangovan speaks about Senthilbalaji DMK entry

வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (14/12/2018)

கடைசி தொடர்பு:13:15 (14/12/2018)

செந்தில் பாலாஜி தி.மு.க-வில் இணைவது ஏன்? - காரணத்தைக் கூறும் ஈ.வி.கே.எஸ்

`பா.ஜ.க-வின் கொத்தடிமையாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக’ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடுமையாக சாடினார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ``ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வின் வீழ்ச்சி பெரிய தோல்வி கிடையாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அவர் பா.ஜ.க-வின் கொத்தடிமை எடுபிடி என்பதற்கு இக்கருத்தே சான்று. தேர்தல் முடிவுக்குப் பிறகு கருத்து தெரிவிப்பதில் ஹெச்.ராஜா பொறுமையைக் கையாள்வார் என்று எதிர்பார்க்கிறேன். வலுவான கூட்டணி அமைப்பதால் தி.மு.க-வின் பலம் கூடிக்கொண்ட போகிறது. தினகரன் கட்சியிலிருந்து எல்லோரும் வெளியே வருவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்’’ என்றார்.