கொடியேற்றத்துடன் தொடங்கியது சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா! | Chidambaram temple flag festival

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (14/12/2018)

கடைசி தொடர்பு:16:40 (14/12/2018)

கொடியேற்றத்துடன் தொடங்கியது சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா!

சிதம்பரம் நடராஜர் கோயிலில், மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.


 சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா

 உலகப் பிரசித்திபெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில், ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சனத் திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும் வெகு சிறப்பாக நடைபெறும். இன்று, மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெறுகிறது.

பக்தர்கள்

  வரும்  22-ம் தேதி சனிக்கிழமை காலை தேர்த்திரு விழா நடைபெற உள்ளது. தொடர்ந்து, 23-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி முதல் 6 மணிக்குள் ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர், அம்பாள் மகா அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகள் வீதியுலாவுக்குப் பின்னர், மதியம் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. 24-ம் தேதி இரவு முத்துப்பல்லக்கு விழாவும் நடைபெறும்.