`கடத்தல் பன்றவன் தப்பிக்கலாம் ஆனா...’ - லாஜிக் சொல்லும் ராஜேந்திர பாலாஜி | Rajendra Balaji Press meet at viruthunagar

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (14/12/2018)

கடைசி தொடர்பு:18:20 (14/12/2018)

`கடத்தல் பன்றவன் தப்பிக்கலாம் ஆனா...’ - லாஜிக் சொல்லும் ராஜேந்திர பாலாஜி

கலப்பட பால் விற்பவர்களுக்கு அபராதம் மட்டுமல்ல தண்டனையும் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

ராஜேந்திர பாலாஜி

விருதுநகரில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``செந்தில் பாலாஜி மீண்டும் அதிமுகவுக்கு வந்தால் மரியாதை இருக்காதோ என நினைத்திருக்கலாம், அல்லது அதிமுகவினரை அதிகம் திட்டிவிட்டோம் என நினைத்திருக்கலாம், அதனால் பிறந்த இடத்தை நோக்கிச் சென்றுவிட்டார்.

கஜா புயல் மிகப்பெரிய பேரிடர். ஆனால், மத்திய அரசு இன்னும் பேரிடராக அறிவிக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது. இதிலிருந்து வடக்கே உள்ளவன்தான் வாழ வேண்டும், தெற்கே உள்ளவர்கள் சாக வேண்டும் என நினைக்கிறார்கள். இந்த நிலையை பிரதமரும், மத்திய அரசும் மாற்றிகொள்ள வேண்டும். 10 லட்சம் பேர் செத்தால்தான் பிரதமர் வந்து பார்ப்பாரா...? 

திமுக தலைவர் ஸ்டாலின் அவர் கட்சியினரை உற்சாகப்படுத்த இடைத்தேர்தலுக்குப் பிறகு அதிமுக ஆட்சி இருக்காது எனக் கூறுகிறார், இடைத்தேர்தலுக்கான வியூகம் அமைக்கப்பட்டு வருகிறது,உறுதியாக வெற்றி பெறுவோம், ஆட்சியும் நிலைத்திருக்கும். கடத்தல் பன்றவன் தப்பிக்கலாம், கலப்படம் பன்றவன் தப்பிக்கக் கூடாது. கலப்பட பால் விற்பவர்களுக்கு அபராதம் மட்டுமல்ல தண்டனையும் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்" என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  தெரிவித்துள்ளார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க