`ஓ.பி.எஸ் மகன் மீது அவதூறு பரப்புகிறார்கள்!’ - நெல்லை போலீஸில் அ.தி.மு.க புகார் | nellai ADMK asked police to take action against the person who spreads false information about OPS son

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (14/12/2018)

கடைசி தொடர்பு:20:40 (14/12/2018)

`ஓ.பி.எஸ் மகன் மீது அவதூறு பரப்புகிறார்கள்!’ - நெல்லை போலீஸில் அ.தி.மு.க புகார்

மணல் கடத்தலில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு தொடர்பு இருப்பதாகச் சிலர் அவதூறு கருத்து பரப்பி வருவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெல்லை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரிடம் அ.தி.மு.க-வினர் புகார் அளித்துள்ளனர்.

அவதூறு பரப்பியதற்கு கண்டனம்

நெல்லை மாவட்டம், தாமிரபரணி ஆற்றுப் படுகையில் மணல் அள்ளுவதற்குக் கடந்த 2011-ம் ஆண்டு பசுமைத் தீர்ப்பாயம் விதித்துள்ள தடை தற்போது வரை தொடர்கிறது. இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் ஓடும் தாமிரபரணி ஆறு, சிற்றாறு, நம்பியாறு ஆகிய ஆற்றுப் படுகைகளில் திருட்டுத்தனமாக மணல் எடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

நெல்லை மாவட்டத்தின் சீவலப்பேரி அருகே உள்ள மடத்துப்பட்டி கிராமத்தில் சிற்றாறு கரையோரத்தில் சரள் மண் அள்ள அனுமதியைப் பெற்றுள்ள சிலர் திருட்டுத்தனமாக ஆற்று மணலை அள்ளி விற்பனை செய்து வருகின்றனர். இது தொடர்பாக நெல்லை பாலாமடையைச் சேர்ந்த வழக்கறிஞர் உச்சிமாகாளி, வழக்கறிஞர் மகாராஜன் ஆகியோர் சில தினங்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து புகார் மனு அளித்தனர். 

அதில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் மற்றும் அ.தி.மு.க-வைச் சேர்ந்த அர்பன் ரவி உள்ளிட்டோர் திருட்டுத்தனமாக மணலை அள்ளி வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்வதாகப் புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மணல் அள்ளுவற்குத் தடை விதிப்பதுடன், மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தனர். இதற்கு ரவீந்திரநாத் குமார் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 

அ.தி.மு.க புகார்

இந்த நிலையில், நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரான தச்சை ராஜா தலைமையில் அக்கட்சியினர் நெல்லை மாநகரக் காவல்துறை ஆணையாளரிடம் இன்று புகார் மனு அளித்தனர். அதில், ஓ.பி.எஸ் மகன் மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். அது குறித்து தச்சை கணேசராஜா கூறுகையில், ``சீவலப்பேரி பகுதியில் அள்ளப்படும் மணலுக்கும் தமிழக துணை முதல்வரின் மகன் ரவீந்திரநாத் குமாருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவர் மீது அவதூறாகத் தகவல் பரப்புகின்றனர். 

துணைமுதல்வர் மகன் ரவீந்திரநாத் குமார் மீது சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள். அதனால் அவர் மீது புகார் தெரிவித்த வழக்கறிஞர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி கட்சியின் வழக்கறிஞர்களுடன் ஆணையாளரைச் சந்தித்து மனு அளித்துள்ளோம்’’ எனத் தெரிவித்தார். மணல் அள்ளுவதற்கும் தமிழக துணை முதல்வர் மகனுக்கும் தொடர்பு இல்லை எனக் கூறப்பட்டபோதிலும், தாமிரபரணி, சிற்றாறு ஆகியவற்றில் சட்ட விரோதமாகத் தற்போது வரை மணல் கொள்ளை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.