வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (14/12/2018)

கடைசி தொடர்பு:20:00 (14/12/2018)

``முதல்வர் எந்த நேரத்தில் தூங்குகிறார் என்றே தெரியவில்லை’’ - நெகிழும் திண்டுக்கல் சீனிவாசன்

தமிழக முதல்வர் எந்த நேரத்தில் தூங்குகிறார் எனத் தெரியவில்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார்.

தமிழக முதல்வர் எந்த நேரத்தில் தூங்குகிறார் எனத் தெரியவில்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார்.

திண்டுக்கல் சீனிவாசன்

தமிழ்நாடு வனத்துறை சார்பாக, வனத்துறையில் பணிபுரிபவர்களுக்கான 24-வது விளையாட்டுப் போட்டிகள், கோவை வனக்கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கொடியேற்றித் தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “வனத்துறைக்கான காலி பணியிடத் தேர்வுகள் சிபாரிசுகள் இல்லாமல் தகுதியின் அடிப்படையிலேயே நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் கும்கி யானைக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, காட்டு யானைகள் ஓடிவிடுகின்றன. அவை எப்படி ஓடுகிறது என்பதே தெரியவில்லை? என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்களுக்கு இந்த யானைகள் சவாலாக  விளங்குகின்றன. விரைவில் யானை பிரச்னை வராமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். யானைகளை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்த வேறு வழியில் நடவடிக்கை எடுக்கப்படும். பயிர்களைச் சேதப்படுத்தும் பன்றிகளை சுட்டுக் கொல்ல விவசாயிகள் அனுமதி கேட்கின்றனர். காட்டுப் பன்றிகள் அதிகமுள்ள இடங்களில், தேவைப்பட்டால் சுடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். செம்மரக் கட்டை மற்றும் சந்தன மரம் கடத்தலைத் தடுக்கும் வகையில் மரம் வெட்டவும் விற்கவும் ஆன்லைன் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழக முதல்வர் இரவு பகல் பாராமல் அயராது உழைப்பதாகவும், எந்த நேரத்தில் தூங்குகிறார் எனத் தெரியவில்லை” என்று பேசினார்.

எடப்பாடி

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன், “சீனியாரிட்டி அடிப்படையில் காலியாக உள்ள இடங்களின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்யப்படும். தற்போது யானை தாக்கி உயிரிழக்கும் வனத்துறையினருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் நிலையில், வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கும் இதே அளவு இழப்பீட்டுத் தொகை கொடுப்பது தொடர்பாகப் பரிசீலித்து வருகிறோம். சின்ன தடாகம் பகுதியில் பயிர்களைச் சேதப்படுத்தி வரும் யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க அகழி மற்றும் வேலி  அமைக்கப்படும். மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தி யானைகளை இடமாற்றும் செய்வது போன்றவை குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். அங்கு விவசாயிகள் ஒரு மாதம் பொறுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.