மேக்கே தாட்டூ அணை விவகாரம் - புதுச்சேரி சட்டப்பேரவையில் கண்டனத் தீர்மானம் | Puducherry Assembly passes resolution against Mekedatu dam project

வெளியிடப்பட்ட நேரம்: 22:40 (14/12/2018)

கடைசி தொடர்பு:22:40 (14/12/2018)

மேக்கே தாட்டூ அணை விவகாரம் - புதுச்சேரி சட்டப்பேரவையில் கண்டனத் தீர்மானம்

மேக்கே தாட்டூவில் அணை கட்டுவதற்கு அனுமதி அளித்த மத்திய அரசைக் கண்டித்து, புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

புதுச்சேரி


மேக்கே தாட்டூவில் அணைகட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், புதுச்சேரி மாநில சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம், இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சிறப்புக் கூட்டத்தில் முதலாவதாக, மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அதைத் தொடர்ந்து, காவிரி ஆற்றில் மேக்கேதாட்டூ பகுதியில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதற்கும், முதல் தர ஒப்புதல் சான்றிதழ் வழங்கிய மத்திய நீர்வள ஆணையத்திற்குக் கண்டனம் தெரிவித்தும், மேக்கேதாட்டூவில் அணை ஏதும் கட்டாமல் மத்திய அரசு தடுக்க வலியுறுத்தியும், முதலமைச்சர் நாராயணசாமி முன்மொழிந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்திற்கு மூன்று பா.ஜ.க நியமன உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். 

உறுப்பினர்கள்

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, “மேகதாது பகுதியில் அணைகட்ட முயலும் கர்நாடக அரசைக் கண்டித்தும், முதல்கட்ட அனுமதி அளித்த மத்திய நீர்வள ஆணையத்தைக் கண்டித்தும், அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு, பேரவையில் இன்று ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேகதாது விவகாரத்தில் மத்திய அரசும், கர்நாடக அரசும் நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை. ஆகவே, காவிரி நதி நீர் ஆணையம் மற்றும் காவிரி நதி நீர் ஒழுங்காற்றுக் குழுவிற்கு தனித்தனி அதிகாரிகளை நியமனம் செய்ய வலியுறுத்தி, புதுச்சேரி அரசு உச்ச நீதிமன்றம் செல்ல இருக்கிறது” என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க