`ராஜேந்திர பாலாஜி உண்மையைத் தானே பேசியிருக்கிறார்' - திருமாவளவன்! | Thirumavalavan slams bjp

வெளியிடப்பட்ட நேரம்: 03:32 (15/12/2018)

கடைசி தொடர்பு:07:27 (15/12/2018)

`ராஜேந்திர பாலாஜி உண்மையைத் தானே பேசியிருக்கிறார்' - திருமாவளவன்!

பி.ஜே.பி அரசு பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உண்மையைக் கூறியிருக்கிறார் என திருமாவளவன் பாராட்டியுளார்.

திருமாவளவன்​​​​​​

இன்று விருதுநகர் மாவட்டத்துக்கு வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால், பத்து லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுச்சூழல் மாசுபடுவதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கால் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. பசுமை பட்டாசுகளை தயாரிக்கச் சொல்கிறது.​​​​ எந்த வேதிப்பொருள்களை வைத்து பசுமை பட்டாசுகளைத் தயாரிக்க வேண்டும் என்பது பற்றி முழுமையான விவரத்தைத் தெரிவிக்கவில்லை.

 பட்டாசு

இந்த நிலையில், வழக்கின் விசாரணையை ஜனவரி மாதத்துக்குத் தள்ளி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம். அதனால், ஆலைகள் திறக்கப்படாமல் தொழிலாளர்கள் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். பட்டாசு வெடிப்பதால் மட்டும்தான் சூழல் மாசுபடுவதாக அரசு சொல்வது நகைச்சுவையாகும். சுற்றுச்சூழலைக் கெடுக்கும் ஹைட்ரோகார்பன் போன்ற மோசமான திட்டங்களைப் பின் வாங்காத மத்திய அரசு பட்டாசில் மட்டும் கடுமையாக உள்ளது. விரைவில் இதற்கான போராட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஈடுபடும்" என்றவரிடம், 'வட மாநிலத்தை மட்டும் மோடி அரசு கவனிக்கிறது. தென் மாநிலங்களைப் புறக்கணிக்கிறது.

ராஜேந்திர பாலாஜி

கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்க மோடி வர மறுக்கிறார்.... என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளாரே?" என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ``அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உண்மையைக் கூறியுள்ளார். அதை நான் வரவேற்கிறேன். உண்மையிலேயே தமிழகத்தின் மீது பி.ஜே.பி அரசு பாராமுகமாக உள்ளது" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க