அரசாங்கத்தின் சில துறைகளைத் தவிர மற்ற துறைகளில் முன்னேற முடியவில்லை - கிருஷ்ணசாமி ஆதங்கம்! | puthiya tamilagam leader krishnasamy talks about Reservation

வெளியிடப்பட்ட நேரம்: 05:14 (15/12/2018)

கடைசி தொடர்பு:07:31 (15/12/2018)

அரசாங்கத்தின் சில துறைகளைத் தவிர மற்ற துறைகளில் முன்னேற முடியவில்லை - கிருஷ்ணசாமி ஆதங்கம்!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

கிருஷ்ணசாமி

அப்போது, ``தமிழகம் மற்றும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 2 கோடி தேவேந்திர குல மக்கள் வாழ்கின்றனர். அவர்களை ஆங்கிலேயர்கள் காலத்தில் தவறுதலாக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து பட்டியல் பிரிவில் சேர்க்கப்பட்டுவிட்டனர். 1925-ம் ஆண்டு ஆங்கிலயேர்கள் காலத்தில் தேவேந்திர குல வேளாளர் சங்கங்கள் கொடுத்த எதிர்ப்பையும் மீறித் தவறுதலாக பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இதே காலகட்டத்தில் தமிழகத்தில் இரண்டு சமுதாயத்தினர் பட்டியலில் சேர்க்கக்கூடாது எனப் போராடினர். அதில் தேவேந்திர குல வேளாளர்களும் நாடார் சமுதாயத்தினரும் போராடினர். அப்போது நாடார் சமுதாயம் லண்டன் வரையிலும் சென்று போராடி தங்களை விடுவித்துக்கொண்டனர். 

அன்றைய காலகட்டத்திலே தேவேந்திர குல வேளாளர்கள் போதிய பொருளாதாரம் இல்லாததால் லண்டன்வரை சென்று போராட முடியாமல் பட்டியல் பிரிவில் சேர்க்கப்பட்டுவிட்டனர். தமிழகத்தில் பட்டியல் பிரிவில் 76 சாதிகள் இருக்கின்றன. இதில் 7 பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர்கள் என அரசாணை பிறப்பிக்க வேண்டும். இதனால் அரசாங்கத்துக்கு எந்தவிதமான பொருளாதார நட்டம் இல்லை. வேறு யாருக்கும் பாதிப்பில்லை. 

கிருஷ்ணசாமி

அரசாங்கத்தின் சில துறைகள் தவிர வேறு எந்தத் துறைகளிலும் எங்களால் முன்னேற முடியாமல் இருக்கிறது. இந்தச் சமூகம் எங்களைத் தாழ்வாக பார்க்கும் நிலையில் இருக்கிறோம் எனக் கருதுகின்றனர். சுயமரியாதைக்கான அடையாளமாகத்தான் தேவேந்திர குல வேளாளர்களைப் பட்டியலிலிருந்து நீக்குமாறு கேட்கின்றனர். இதை மத்திய, மாநில அரசுகள் தேவையில்லாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இது புதிய தமிழகம் கட்சியின் கோரிக்கை மட்டுமல்ல, தமிழகத்தில் வாழும் ஒட்டுமொத்த தேவேந்திர குல வேளாளர் மக்களின் ஒருமித்த கருத்து. இதற்காக மூன்றாண்டுக் காலம் போராடி வருகிறோம். இதனால் மக்கள் பொறுமையிழக்கிறார்கள், போராடத் தயாராவதற்கு முன்பாக அரசாணை பிறப்பிக்க வேண்டும். மத்திய அரசுக்குப் பட்டியலிலிருந்து விலக்களிப்பதற்கு மாநில அரசு பரிந்துரை செய்ய வேண்டும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க