துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நளினியைச் சந்தித்த முருகன்! | Nalini-Murugan meeting in Vellore jail

வெளியிடப்பட்ட நேரம்: 11:29 (15/12/2018)

கடைசி தொடர்பு:11:47 (15/12/2018)

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நளினியைச் சந்தித்த முருகன்!

வேலூர் சிறையில் இன்று காலை மனைவி நளினியை முருகன் சந்தித்துப் பேசினார்.

நளினி - முருகன்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகன், வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரின் மனைவி நளினி, வேலூர் பெண்கள் தனிச்சிறையில் தண்டனை அனுபவிக்கிறார். இருவரும், 15 நாள்களுக்கு ஒருமுறை சந்தித்துப் பேச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, இன்று காலை துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முருகன், ஆண்கள் சிறையலிருந்து பெண்கள் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மனைவி நளினியைச் சந்தித்த அவர், ஒரு மணி நேரம் பேசினார். அதன்பிறகு, மீண்டும் ஆண்கள் சிறையில் கொண்டு வந்து அடைக்கப்பட்டார்.