`செத்த வீட்டில் அரசியல் நடத்துவது மானங்கெட்ட பிழைப்பு!’ - ராஜேந்திர பாலாஜிக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதிலடி | central minister pon.Radhakrishnan slams rajendra balaji

வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (15/12/2018)

கடைசி தொடர்பு:16:06 (15/12/2018)

`செத்த வீட்டில் அரசியல் நடத்துவது மானங்கெட்ட பிழைப்பு!’ - ராஜேந்திர பாலாஜிக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதிலடி

லட்சக்கணக்கானோர் இறந்தால்தான் பிரதமர் தமிழகம் வருவார் என்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்துக்கு 'செத்த வீட்டில் அரசியல் நடத்துவதைவிட மானங்கெட்ட பிழைப்பு வேறெதுவும் கிடையாது' என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் காட்டமாகத் தெரிவித்தார்.

ட்சக்கணக்கானோர் இறந்தால்தான் பிரதமர் தமிழகம் வருவார் என்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்துக்கு 'செத்த வீட்டில் அரசியல் நடத்துவதைவிட மானங்கெட்ட பிழைப்பு வேறெதுவும் கிடையாது' என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் காட்டமாகத் தெரிவித்தார்.

 பொன் ராதாகிருஷ்ணன்

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட உள் நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் விடுதியை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார். அந்த நிகழ்ச்சியில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ``மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு பெட் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் வராந்தாவில் தங்கியிருப்பார்கள். அதற்கு தீர்வு ஏற்படுத்தும் விதமாக, புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வளர்ச்சி ஏற்பட வேண்டும். காலத்தின் தன்மைக்கேற்ப நாம் மாறாமல் இருந்தால் பின் தங்கிவிடுவோம். நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக ஆக்க வேண்டும். நாளைய வளர்ச்சிக்கு ஏற்ப நாம் மாற வேண்டும். குமரி மாவட்டத்தில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைப்பதற்காக மத்திய அமைச்சர் நட்டாவிடம் பேசியுள்ளேன். இயற்கை காப்பாற்றப்பட்டே ஆக வேண்டும். முன்னேற்றத்துடன்கூடிய இயற்கை அழகை நாம் ஏற்படுத்த முடியும்" என்றார்.

 பொன் ராதாகிருஷ்ணன்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ``பெட்ரோல் விலைக்கும் தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விலை மாறுதலுக்கு மத்திய அரசு பொறுப்பல்ல. கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தாழ்வுக்கு ஏற்ப பெட்ரோல் விலை மாறி வருகிறது. கஜா புயல் விவகாரத்தில் லட்சக்கணக்கானோர் இறந்தால்தான் பிரதமர் தமிழகம் வருவார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது குறித்து கேட்கிறீர்கள். செத்த வீட்டில் அரசியல் நடத்துவதைவிட மானங்கெட்ட பிழைப்பு வேறெதுவும் கிடையாது. நான்குவழிச் சாலை திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறுவது வேடிக்கையானது. எந்தத் திட்டத்தில் என்னென்ன ஊழல் நடந்திருக்கிறது என அவர்கள் கூறட்டும். ஒரு திட்டத்தின் மொத்த மதிப்பீடு எவ்வளவு எனத் தெரியாமல் ஒரு முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி இருக்கிறார் என்பதை அறிந்துகொண்டேன். இதுசம்பந்தமாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். உயிரே போனாலும் 2,000 கோடி அல்ல ஒத்த பைசா தந்தாலும் நான் வாங்க மாட்டேன். சென்னையை மையமாகக் கொண்டு இத்தனை ஆண்டுகளாகச் செயல்பட்டவர்கள் இப்போது கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்துள்ளனர்.

உள்நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் விடுதி

இதுவரை ஒரு கோடி ரூபாய்க்குக்கூட பணி நடக்காதபோது அவர்கள் எங்கு சென்றிருந்தார்கள். இப்போது சாதி, மத ரீதியாகப் பிரச்னையை தூண்டிவிடத் திட்டமிடுகிறார்கள். தமிழகத்தில் எந்தக் கட்சியோடும் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஐ.ஐ.டி-யில் உணவு விடுதியில் பிரிவினை ஏற்படுத்தியது தவறான செயல். அ.தி.மு.க மூழ்கும் கப்பல் எனத் தி.மு.க-வில் சேர்ந்த பிறகு, செந்தில் பாலாஜி கூறியுள்ளார். அந்தக் கப்பலில்தான் சிறிது நாள்கள் அவர் துணை கேப்டனாக இருந்தார். இலங்கையில் அமைதி நிலவினால் அங்குள்ள தமிழர்களுக்கும், நம் நாட்டின் வெளி உறவுக்கும் நல்லது" என்றார்.