கொல்லிமலையில் பராமரிப்பின்றி பாழாகும் முதுமக்கள் தாழி! | Kollimalai People urges to government to take care of Jar burials in the area

வெளியிடப்பட்ட நேரம்: 16:24 (15/12/2018)

கடைசி தொடர்பு:16:24 (15/12/2018)

கொல்லிமலையில் பராமரிப்பின்றி பாழாகும் முதுமக்கள் தாழி!

பண்பாட்டு அடையாளங்கள் சிதிலம் அடைவது நமது பழைமை வரலாற்று ஆய்வுகளுக்குப் பெரிதும் இழப்பாகும்.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாத் தலம் கொல்லிமலை. சங்க காலத்து மன்னனான வல்வில் ஓரியால் ஆளப்பட்ட நிலப்பகுதி என்னும் சிறப்புடைய இந்தப் பகுதியில், சில ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட  அகழ்வாய்வில் பழைமையான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், அவை இன்று முறையான பராமரிப்பு இன்றிச் சேதமடைந்து வருகிறது. 

முதுமக்கள் தாழி

இதைப்பற்றி அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், ``சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் நடமாட இயலாத வயது முதிர்ந்தவர்களை முதுமக்கள் தாழியில் வைத்துக் கூடவே அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும் வைத்துவிடுவர். இவற்றில் உள்ள  துவாரங்கள் வழி அவர்களுக்குத் தினந்தோறும் உணவும் தண்ணீரும் கொடுக்கப்படும்.    

தாழி

வாசலூர்பட்டி எனப்படும் இடத்துக்கு அருகே காணப்படும் தாழியைப் பராமரிக்க கான்கிரீட் தளம் அமைத்து, உள்ளே சென்று வரப் படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டன. ஆனால், இன்று அந்த இடம் பராமரிப்பில்லாமல் சேதமடைந்து வருகிறது.

சிதலமடைந்த தாழி

அதே போல வாசலூர்பட்டியில் தாழி இருக்கும் இடம் குறித்த எந்த அறிவிப்புப் பலகையும் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் இதுகுறித்து அறியமுடிவதில்லை. 

தாழிக்கு செல்லும் வழி

இத்தகைய பண்பாட்டு அடையாளங்கள் சிதிலம் அடைவது நமது பழைமை வரலாற்று ஆய்வுகளுக்குப் பெரிதும் இழப்பாகும். எனவே அரசும், தொல்பொருள் ஆய்வுத்துறையும் உடனடி நடவடிக்கை எடுத்து இவற்றைப் பராமரிக்க வேண்டும்’’ என்று கூறினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க