‘போனை எடுக்காத காதலன்!’ -உயிரை மாய்த்த நர்சிங் மாணவி | 'Lover of Love!' -He is a nursing nursing student

வெளியிடப்பட்ட நேரம்: 01:46 (16/12/2018)

கடைசி தொடர்பு:01:46 (16/12/2018)

‘போனை எடுக்காத காதலன்!’ -உயிரை மாய்த்த நர்சிங் மாணவி

வேலூரில் காதலன் பேச மறுத்து போனை எடுக்காததால் விரக்தியடைந்த நர்சிங் மாணவி தீ குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை

வேலூர் பாகாயம் சஞ்சீவபுரத்தைச் சேர்ந்தவர் குணசீலன். இவரின் மகள் அருகில் உள்ள கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார். இதற்கிடையே, ஒருவரைக் காதலித்து வந்துள்ளார் அப்பெண். இந்த விவகாரம் வீட்டிற்குத் தெரியவர, பெற்றோர் கண்டித்துள்ளனர். மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். இதுபற்றி தன்னுடைய காதலனிடம் போனில் தெரிவித்த அவர், ‘தன்னைத் திருமணம் செய்து கொள்’ என்று கூறியுள்ளார். 

திருமணத்திற்கு மறுத்த காதலன், அதன்பிறகு போனை எடுக்கவில்லை. பலமுறை போன் செய்தும், காதலன் போனை எடுக்கவில்லை. இதையறிந்த பெற்றோர் மீண்டும் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அப்பெண், நேற்று நள்ளிரவில் வீட்டில் உள்ள கழிவறையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தீ விபத்தின் போது மகளின் அலறல் சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த பெற்றோர் அலறி எழுந்தனர்.

கழிவறை பகுதிக்கு ஓடி வந்து பார்த்தபோது, மகள் தீயில் எரிந்து கொண்டிருந்ததை பார்த்துக் கதறி துடித்தனர். சிறிது நேரத்தில் அந்தப் பெண் தீயில் முழுவதுமாக வெந்து உயிரிழந்தார். தீயை அணைக்க முற்பட்ட பெற்றோரும் தீக்காயமடைந்தனர். மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து பாகாயம் போலீஸார் வழக்குப்பதிந்து, காதலன் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.