`சிலரின் அரசியல் சதுரங்கத்தால் தான் ஏழுபேர் விடுதலை தாமதமாகிறது’ - ராஜேந்திர பாலாஜி ஓபன்டாக்! | Rajendra balaji talk abouts Rajiv Gandhi murder case

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (16/12/2018)

கடைசி தொடர்பு:15:00 (16/12/2018)

`சிலரின் அரசியல் சதுரங்கத்தால் தான் ஏழுபேர் விடுதலை தாமதமாகிறது’ - ராஜேந்திர பாலாஜி ஓபன்டாக்!

"கஜா புயல் நிவாரணத்தில் முறைகேடு நடப்பதாக பேட்டி கொடுக்கும் மக்கள் அ.தி.மு.கவுக்கு எதிரானவர்களாக இருப்பார்கள்." என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கோவையில் தெரிவித்துள்ளார்.

ராஜேந்திர பாலாஜி

 

இது தொடர்பாக பேசிய அவர், "ஸ்டெர்லைட் ஆலையை  திறக்கவிட மாட்டோம் என முதல்வர் கூறி உள்ளார். எனவே, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு இனிமேல் சாத்தியம் இல்லை. கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஒரு வரன்முறை நிர்ணயித்து இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் அதில் முறைகேடு செய்ய முடியாது. முறைகேடு என்பது பொய்யானது. அரசு கொண்டுவரும் திட்டங்களில்  முறைகேடு  என்று சின்னதாக செய்தி வந்தாலும் அதை மீடியாக்கள்  பெரிது படுத்துகின்றன. அரசு  திட்டங்களின்  சிறப்புகள் மக்களுக்கு சென்றடைவதை  தடுக்க எதிர்கட்சிகளின் தூண்டுதலின் பேரில் சிலர் பொய் பிரச்சாரம்  செய்து வருகின்றனர். கஜா புயல் நிவாரணத்தில் முறைகேடு நடப்பதாக பேட்டி கொடுக்கும் மக்கள் அ.தி.மு.கவுக்கு எதிரானவர்களாக இருப்பார்கள்.

புயலால் பாதித்த பகுதிகளில் 95 சதவிகிதம் மின் இணைப்பு வழங்கப்பட்டுவிட்டது. ஒரு சில கிராமங்களில் சில காரணங்களால் மின் இணைப்பு வழங்கப்படாமல் இருக்கிறது. மின் வாரிய ஊழியர்கள் தங்கள் உயிரை பணையம் வைத்து மின் இணைப்பு வழங்கி உள்ளனர். அவர்களை பராட்ட  மனம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. குறை கூற வேண்டாம்.அ.தி.மு.க உணர்வுள்ளவர்கள் எல்லோரும் அ.தி.மு.கவை விட்டு சென்றாலும் மீண்டும் அ.தி.மு.கவில் இணைவார்கள். டி.டி.வி.தினகரனுடன் சென்றவர்கள்  எல்லோரும் நொந்து போய் இருக்கின்றனர். எல்லாரும்  அ.தி.மு.கவிற்கு வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அ.ம.மு.கவில் இருப்பவர்கள் தவறான முடிவு எடுத்து விட்டோம் என வருந்துகிறார்கள்.

கீழ்மட்ட நிர்வாகிகள் அ.தி.மு.க வந்துகொண்டு இருக்கின்றனர். அ.தி.மு.கவில் இணையக்கோரி டி.டி.வி.தினகரனுடன் இருப்பவர்களிடம்  எந்த பேச்சும் நடத்தப்படவில்லை. அதேபோல,  செந்தில்பாலாஜியுடன் அ.தி.மு.கவினர் யாரும் செல்லவில்லை.
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையில் தமிழக அரசு சுணக்கமாக செயல்படவில்லை.   கவர்னர் கையில்தான் முடிவு இருக்கின்றது.  ஏழு பேர் விடுதலையில்  முதல்வர் அழுத்தம் கொடுத்து வருகிறார் . விரைவில் உரிய பதில் கிடைக்கும்.  மூன்று பேர், ஏழு பேர் என்ற பாகுபாடு அ.தி.மு.க அரசிற்கு கிடையாது. அப்பாவி மக்கள் விடுதலைக்கு அ.தி.மு.க போராடி வருகிறது.  சில பிரச்னைகளை வைத்துக்கொண்டு அரசியலில் சிலர்  சதுரங்க விளையாட்டு  ஆடுவதால் 7 பேர் விடுதலையில் காலதாமதம் ஏற்படுகிறது. விரைவில் அவர்களுக்கு விடுதலை கிடைக்கும்.

பயத்தினால், தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே தி.மு.க கூட்டணி அமைத்து வருகிறது. அ.தி.மு.கவிற்கு எந்த பயமும் கிடையாது. தேர்தல் அறிவித்தவுடன் அ.தி.மு.க சார்பில்  மெகா கூட்டணி அமைக்கப்படும்.  அதற்கான வியூகங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  வகுத்து வருகிறார்.  அ.தி.மு.க கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க