பெய்ட்டி புயல் எதிரொலி - கடலூரில் கடும் கடல் சீற்றம் | Storm warning cage is hoist in Cuddalore

வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (16/12/2018)

கடைசி தொடர்பு:10:55 (18/12/2018)

பெய்ட்டி புயல் எதிரொலி - கடலூரில் கடும் கடல் சீற்றம்

கடலூர் துறை முகத்தில் புயல் எச்சரிக்கை மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் கடலூர் மற்றும் மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக உள்ளது. கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை

வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்று இரவு புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயலுக்கு ஃபெய்ட்டி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.  ஃபெய்ட்டி புயல் வட மேற்கு திசையில் நகர்ந்து கடலூருக்கு 400 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்குக் 410 கிலோ மீட்டர் தொலைவிலும், மச்சிலிப்படினத்திற்கு 500 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைக் கொண்டுள்ளது. இன்று பிற்பகல் அல்லது இரவில் சென்னைக்கு அருகாமையில் வந்து பின்னர் வடமேற்கு திசையில் கார்கிநாடா பகுதியில் 17-ம் தேதி காலை அல்லது பிற்பகல் கரையைக் கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

கடலூர்

இதனால் கடலூர் துறை முகத்தில்  மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைகூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. அம்மாவட்ட  மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. கடலூர் அருகே உள்ள தேவனாம்பட்டினத்தில் கடல் நீர் உட்புகாதவாறு கற்கள் கொட்டி வைத்திருந்தனர். தற்பொழுது அதிக அளவில் கடல் சீற்றம் காரணமாக அந்த கற்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுகிறது. இதனால் கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் கடலூர் கடற்கரைக்கு அதிக அளவில் மக்கள் வந்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் கடல் சீற்றம் காரணமாக போலீசார் பொது மக்களைக் கடற்கரையோரம் செல்ல அனுமதிக்காமல் தடுத்து வருகின்றனர். 

கடலூர்

ஒலிப்பெருக்கி மூலம்  ‘கடற்கரைப் பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம்’ என எச்சரிக்கைவிடுத்கொண்டிருக்கின்றனர். இதனால் விடுமுறையை ஜாலியாக கடற்கரையில் கழிக்க வந்த பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்