சிலைக் கடத்தல் வழக்கு - அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது! | Hrnce official thirumagal arrested in idol theft case

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (16/12/2018)

கடைசி தொடர்பு:17:00 (16/12/2018)

சிலைக் கடத்தல் வழக்கு - அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது!

பாலீஸ்வரர் கோயில் சிலை காணாமல் போன வழக்கில் அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் திருமகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அறநிலையத் துறை

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இருந்த புன்னைவனநாதர் சிலை காணாமல் போனதாக ஶ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த 2004ம் ஆண்டு நடைபெற்ற திருப்பணியின் போது, அங்கிருந்த புன்னைவனநாதர் கற்சிலை மாற்றப்பட்டு, அதற்குப்பதிலாக வேறுஒரு புதிய சிலை வைக்கப்பட்டதாகக் கூறியிருந்தார். இந்த வழக்கை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.

திருமகள்

அறநிலையத்துறையில் உள்ள மூன்று இணை ஆணையர்களே திருமகளுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்திருப்பதாகச் சொல்லப்பட்டது. அதோடு, கோயில் குருக்களிடமும் சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியதிகும், திருமகள் பெயரே அடிபட்டிருக்கிறது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜானின் கேட்டிருந்தார். அவரோடு இந்த வழக்கில் டிவிஎஸ் வேணு சீனிவாசன், அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபால், ஸ்தபதி முத்தையா ஆகியோரும் ஜாமினுக்கு விண்ணப்பித்திருந்தனர். திருமகள் தவிர மற்ற மூவருக்கும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.

ரங்கராஜன்


இந்நிலையில், கடந்த சில தினங்களாகத் தலைமறைவாகியிருந்ததாக சொல்லப்பட்ட திருமகள் உச்ச நீதிமன்றத்தை நாடினார். அங்கும் அவருக்கு முன் ஜாமின் கொடுக்கப்படவில்லை. ஆனால் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றம் நினைத்தால் முன் ஜாமின் கொடுக்கலாம் என்றது உச்ச நீதிமன்றம். இந்நிலையில், இன்று காலை சென்னையில் வைத்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் திருமகள் கைது செய்யப்பட்டிருக்கிறார். கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.