வன விலங்குகளுக்கு தாது உப்பு கொடுத்த வனத்துறையினர்! | Forest Department Feed Mineral salt for Mammals

வெளியிடப்பட்ட நேரம்: 00:55 (17/12/2018)

கடைசி தொடர்பு:00:55 (17/12/2018)

வன விலங்குகளுக்கு தாது உப்பு கொடுத்த வனத்துறையினர்!

தேவதானப்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன விலங்குகளுக்கு உப்புக் கட்டி வைக்கும் பணி நேற்று நடைபெற்றது.

வன விலங்குகள்

தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை, கொடைக்கானல் வன உயிரின சரணாலயத்திற்கு உட்பட்ட தேவதானப்பட்டி வனச்சரகம், பெரியகுளம், சோத்துப்பாறை,  மஞ்சளாறு, முருகமலை, கும்பக்கரை உள்ளிட்ட வனப்பகுதிகளில் வாழும் வன உயிரினங்களுக்கு நேற்று வனப்பகுதியில் உப்புக் கட்டிகள் வைக்கும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டனர். வன விலங்குகளுக்குத் தேவையான தாதுப்பொருள்கள் தேவையான அளவு கிடைக்கும் வகையிலும் மற்றும் வன உயிரினங்களுக்குச் செரிமானம் ஏற்படுத்தும் வகையிலும் இந்த உப்புக் கட்டிகள் வைக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

இப்பணியில், வனத்துறை ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் ஈடுபட்டனர். இது குறித்து தேவதானப்பட்டி வனச்சரகர் சுரேஷ்குமார் கூறும் போது, "வனப்பகுதியில் வளர்கின்ற செடி கொடிகளை உண்டு வாழ்ந்து வரும் வன உயிரினங்களுக்குத் தாதுப்பொருட்கள் தேவையான அளவு கிடைப்பதில்லை. இதனால் தாதுப் பொருள்கள் கிடைக்கும் வகையிலும் மற்றும் வன உயிரினங்களுக்குச் செரிமானம் ஏற்படுத்தும் வகையிலும் வனப்பகுதிகளில் தாது உப்புக் கட்டிகள் வைக்கும் பணி வருடத்தில் பெரும்பாலான தினங்களில் நடைபெறும்.  வனவிலங்குகள் அதிக நடமாட்டம் உள்ள பகுதிகளில் இது போன்ற தாது உப்புகள் கட்டிகள் வைக்கப்பட்டும். இந்த நடைமுறையின்படி வனப்பகுதியில் தாதுஉப்புக் கட்டிகள் வைக்கப்பட்டது" என்றார்.