‘பைக் திருடர்கள் இருவர் கைது!’− பெரியகுளம் போலீஸாருக்குக் குவியும் பாராட்டுகள் | Bike thieves arrested in theni

வெளியிடப்பட்ட நேரம்: 02:55 (17/12/2018)

கடைசி தொடர்பு:09:50 (17/12/2018)

‘பைக் திருடர்கள் இருவர் கைது!’− பெரியகுளம் போலீஸாருக்குக் குவியும் பாராட்டுகள்

இருசக்கர வாகனம் திருடிய இருவரை போலீஸார் கைதுசெய்த சம்பவம், பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

திருடர்கள்

தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை மேதகார படித்துரை தெருவைச் சேர்ந்தவர்  சஞ்சீவி (வயது 40). இவருக்குச் சொந்தமான இரு சக்கர வாகனம், கடந்த மாதம் காணாமல்போனது.  இதுதொடர்பாக சஞ்சிவி, பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் தனிப் படை அமைத்து, இருசக்கர வாகனத்தைத் திருடிய கும்பலைத் தேடிவந்தது காவல் துறை. இந்நிலையில், பெரியகுளம் இந்திராபுரி தெருவில், சஞ்சீவிக்குச் சொந்தமான இருசக்கர வாகனம் இருப்பதைக் காவல் துறையினர் கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டதில், பெரியகுளம்  பங்களாப் பட்டியைச் சேர்ந்த விஜயராகவன் (வயது 22) மற்றும் இந்திராபுரி தெருவைச் சேர்ந்த தினேஷ் (வயது 23) ஆகிய இருவர் சஞ்சீவியின் இருசக்கர வாகனத்தைத் திருடியது தெரியவந்தது. 

இரு சக்கர வாகனம்

இருவரையும் கைதுசெய்த பெரியகுளம் வடகரை காவல் ஆய்வாளர் சுரேஷ், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சமீப காலமாக பெரியகுளம், தேவதானப்பட்டி பகுதிகளில் இருசக்கர வாகனம் திருட்டு, இரவு நேரங்களில் வாகனங்களுக்குத் தீ வைப்பது, பெட்ரோல் திருடுவது எனப் பொதுமக்கள் அச்சமடைந்திருந்த சூழலில், இருசக்கர வாகனத் திருடர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டிருப்பது பெரியகுளம் பகுதி மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.