`எங்க சாதனைகளையும் இனி டி.வி-யில் காண்பிப்பாங்க..’ - அரசின் புது சேனலால் மகிழ்ச்சியில் மாணவர்கள் | Government student talks about new initiative of launching channel for them

வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (17/12/2018)

கடைசி தொடர்பு:12:35 (17/12/2018)

`எங்க சாதனைகளையும் இனி டி.வி-யில் காண்பிப்பாங்க..’ - அரசின் புது சேனலால் மகிழ்ச்சியில் மாணவர்கள்

பள்ளிக் கல்வித்துறை சார்பாக, தொலைக்காட்சி சேனல் ஒன்று பொங்கல் முதல் ஒளி்பரப்பாக உள்ளது.

பள்ளி மாணவர்களின் நலன் கருதி, தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பாக ,தொலைக்காட்சி சேனல் ஒன்று பொங்கல் முதல் ஒளி்பரப்பாக உள்ளதாகவும், இதற்காக 1.35 கோடி ஒதுக்கப்பட்டு, அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் 8-வது தளத்தில் படப்பிடிப்பு நடந்துவருவதாகவும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த முயற்சி குறித்து, ஆசிரியர்,  மாணவர்களிடம் கருத்துக் கேட்டோம்.

                                                                                                     மாணவர்கள்


ராஜேஸ்வரி - உயர்நிலை ஆசிரியர், விருதுகர்: அரசின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. அரசால் தொடங்கப்படும் சேனலில் மாணவர்களுக்கான புதிய திட்டங்கள், உதவித் தொகை, கல்வியாளர்களின் கலந்துரையாடல், மாணவர்களின் சாதனைகள் போன்றவை ஒளிபரப்பப்படும்  என பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதன்மூலம் கிராமப்புற மாணவர்களின் சாதனைகள் இனி, சமூகத்தால்  அடையாளம் காணப்படும். 'நீட்' தேர்வு வரையறைகள் உள்ளிட்ட, கல்வித் துறையில் நடக்கும் மாறுதல்களை மாணவர்களே இனி நேரடியாக உடனுக்குடன் அறிந்துகொள்வதுடன், மாறுதல்களுக்கான அவசியத்தையும் புரிந்து கொள்வார்கள். தமிழக அரசின் இந்த முயற்சிக்கு நன்றி.  

ஜீவா- மாணவர் விழுப்புரம்:பள்ளி மாணவர்
பள்ளிக் கல்வித் துறையின் சேனல்மூலம் மற்ற பள்ளிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளையும், கற்றலில் செய்யப்படும் புதிய முயற்சிகளையும் அறிந்துகொள்ள முடியும் என்பதைத் தாண்டி, பல நிபுணர்களின் ஆலோசனைகளும், அறிவுரைகளும் எல்லா மாணவர்களையும் இனி எளிதில் சென்றடையும். தனியார் பள்ளி மாணவர்கள் போல எங்களுடைய சாதனைகளையும் இனி டி.வி-யில் காண்பிப்பார்கள் என நினைக்கும்போது எனர்ஜி லெவல் அதிகரிக்கிறது.