இம்முறை நாட்டுப்படகு மீனவர்கள்! - பாம்பனில் தொடரும் இலங்கையின் அத்துமீறல் | pamban country boat fisherman arrested by Sri lankan navy

வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (17/12/2018)

கடைசி தொடர்பு:15:45 (17/12/2018)

இம்முறை நாட்டுப்படகு மீனவர்கள்! - பாம்பனில் தொடரும் இலங்கையின் அத்துமீறல்

 பாம்பனிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற நாட்டுப் படகு மீனவர்கள் 8 பேரை இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்ற சம்பவம் மீனவர்களிடையேஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாம்பனிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற நாட்டுப் படகு மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்ற சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டு படகு மீனவர்கள்


பாம்பனைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவருக்குச் சொந்தமான  நாட்டுப்படகு ஒன்றில் பாம்பனைச் சேர்ந்த ஸ்டீபன், மில்டன், அந்தோணி, ஸ்டீபன் ராஜ் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் உட்பட 8 மீனவர்கள் கடந்த 14-ம் தேதி பாம்பன் கடற்கரையிலிருந்து மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

இவர்கள் நேற்று இரவு மீன்பிடித்துவிட்டு கரை திரும்பிக்கொண்டிருந்த வேளையில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் நாட்டுப்படகினையும், அதில் இருந்த மீனவர்களையும் சிறைப்பிடித்துச் சென்றனர். சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக இலங்கை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

பெய்ட்டி புயல் எச்சரிக்கையினால் ஆழ்கடல் பகுதிக்குச் செல்லும் விசைப்படகு மீனவர்கள் கடந்த சில நாள்களாக மீன்பிடிக்கச் செல்லவில்லை. இந்நிலையில் விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை சிறைப்பிடித்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள இலங்கை கடற்படையினர் இம்முறை நாட்டுப்படகு மீனவர்களை சிறைப்பிடித்து சென்றிருப்பது பாம்பன் பகுதி மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 3 மாதங்களுக்கு முன் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் 8 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தலா 60 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்நிலையில் மேலும் 8 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.