`நள்ளிரவில் மனநலம் பாதித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!’ - கூலித் தொழிலாளி கைது | Sexual harassment for women one arrested

வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (18/12/2018)

கடைசி தொடர்பு:07:18 (18/12/2018)

`நள்ளிரவில் மனநலம் பாதித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!’ - கூலித் தொழிலாளி கைது

திருப்பத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

பாலியல் வன்கொடுமை

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த நத்தம் காலனியைச் சேர்ந்தவர் மீனா (26), (பெயர் மாற்றம்). மனநலம் பாதிக்கப்பட்ட இப்பெண், தாய் மற்றும் அண்ணன் அரவணைப்பில் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (48). கட்டுமான கூலித் தொழிலாளி. நேற்றிரவு மீனாவின் வீட்டுக்குள் புகுந்த முருகன், மனநலம் குன்றிய பெண் என்று கூட பார்க்காமல் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அவரின் அண்ணன் ஓடி வந்து பார்த்தார். அவரிடம் சிக்காமல் முருகன் ஆடைகளை தூக்கிக்கொண்டு அரை நிர்வாண கோலத்தில் தப்பி ஓடி விட்டார். நள்ளிரவு நேரம் என்பதால் அவரின் மானம் கப்பலேறவில்லை. இன்று காலை கந்திலி போலீஸில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த முருகனைத் தேடிப் பிடித்து கைது செய்தனர். விசாரணையில், நீண்ட நாள்களாக அந்தப் பெண்ணுக்கு முருகன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார்  அவரைச் சிறையில் அடைத்தனர்.