4 கும்கி... 2 ஜே.சி.பி... மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட கோவை `விநாயகன்'! | Coimbatore: Anasthisia injection insert for Vinayagan wild elephant

வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (18/12/2018)

கடைசி தொடர்பு:10:05 (18/12/2018)

4 கும்கி... 2 ஜே.சி.பி... மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட கோவை `விநாயகன்'!

கோவையில் இடமாற்றம் செய்வதற்காக, விநாயகன் என்ற காட்டு யானைக்கு மயக்க ஊசி போடப்பட்டுள்ளது.

விநாயகன்

கோவை தடாகம், பெரியதடாகம், சின்னதடாகம் மற்றும் ஆனைக்கட்டி பகுதிகளில் காட்டுயானைகள் நடமாடுவது வழக்கம். அதில், விநாயகன் மற்றும் சின்னத்தம்பி என்றழைக்கப்படும் காட்டு யானைகளால், விவசாய நிலங்களும், வீடுகளும் சேதப்படுத்தப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, அந்த யானைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு, வனத்துறை மேலிடமும் அனுமதி வழங்கிய நிலையில், சூழலியல் ஆர்வலர்களும், பொதுமக்கள் சிலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

கும்கி

இதனிடையே, காட்டு யானைகளை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் நேற்று சென்னையில் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், பெரிய தடாகம் அருகே விநாயகனுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டுள்ளது. 4 கும்கிகள் மற்றும் ஜே.சி.பி உதவியுடன் காட்டு யானையை வாகனத்தில் ஏற்றும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

விநாயகன்

சம்பவ இடத்தில், வனவிலங்கு மருத்துவர்கள் கலைவாணன், மனோகரன், அசோகன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் விநாயகனை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்தக் காட்டு யானை முதுமலைப் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.