`பெய்ட்டி' புயலுக்கு 7 பேர் பலி; 12,000 ஹெக்டேர் பயிர் சேதம் - உடனடியாக களமிறங்கிய சந்திரபாபு நாயுடு | 7 dead for Cyclone Phethai

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (18/12/2018)

கடைசி தொடர்பு:11:30 (18/12/2018)

`பெய்ட்டி' புயலுக்கு 7 பேர் பலி; 12,000 ஹெக்டேர் பயிர் சேதம் - உடனடியாக களமிறங்கிய சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநிலம் காக்கிநாடா - ஏனாம் இடையே நேற்று மதியம் 3.50 மணிக்கு ‘பெய்ட்டி’ புயல் கரையைக் கடந்த நிலையில் புயலால் ஏற்பட்ட சேத விவரங்கள் தெரியவந்துள்ளன.

பெய்டி

கடந்த 14-ம் தேதி தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவி இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. தொடர்ந்து இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்தப் புயல் சென்னைக்குத் தென் கிழக்கே 590 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் இருந்து தென் கிழக்கே 770 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டது.

பெய்டி

 

இந்தப் புயலுக்கு `பெய்ட்டி' எனப் பெயரிடப்பட்டது. அதன்படி, ஆந்திர மாநிலம் காக்கிநாடா - ஏனாம் இடையே நேற்று மதியம் 3.50 மணிக்கு ‘பெய்ட்டி’ புயல் கரையைக் கடந்து ஒடிஷா நோக்கிச் சென்றதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது ஆந்திராவில் பலத்த காற்று வீசியுள்ளது. பலத்த காற்றின் காரணமாக ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. 

பெய்டி

இதற்கிடையே, புயலுக்கு இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்கள் விசாகப்பட்டினம், கோதாவரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இதேபோல் கடலுக்குச் சென்ற மீனவர்கள் 6 பேரைக் காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புயலின் காரணமாக விசாகப்பட்டினம், குண்டூர், கோதாவரி, கிருஷ்ணா மாவட்டங்களில் 12,000 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளது என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

சந்திரபாபு நாயுடு

மேலும், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு உடனடி நிவாரண நிதியாக ரூ.50,000 அறிவித்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து புயல் நிவாரணம் மற்றும் சேதப் பணிகளை கவனித்து வருகிறார். தொடர்ந்து விசாகப்பட்டினம், கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் முதல்வர் சந்திரபாபு நாயுடு 2 நாள்கள் தங்கி, மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளைப் பார்வையிட உள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க