திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பரமபத வாசல் திறப்பு! - பக்தர்கள் பரவச தரிசனம் | Vaikunta Ekadasi at Triplicane Parthasarathy Temple

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (18/12/2018)

கடைசி தொடர்பு:13:50 (18/12/2018)

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பரமபத வாசல் திறப்பு! - பக்தர்கள் பரவச தரிசனம்

கோவிந்தா கோஷம் விண்ணதிர பரமபத வாசலில் பார்த்தசாரதி பெருமாள் எழுந்தளி அருள்பாலித்தார்

ன்று அனைத்து வைணவத் தலங்களிலும் கடந்த பத்து நாள்களாக நடைபெற்றுவந்த பகல்பத்து உற்சவம் நிறைவுபெற இன்று முதல் ராப்பத்து உற்சவம் தொடங்கியது. பகல் பத்து முடிந்து ராப் பத்து தொடங்கும் நாள்தான் வைகுண்ட ஏகாதசித் திருநாள். இன்று அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்கவாசல் திறப்பும் பகவான் அந்த வழியில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கும் வைபவமும் நடைபெற்றது.

பரமபத வாசல்

வைகுண்ட ஏகாதசியன்றுதான் நம்மாழ்வார் வைகுண்ட வாசனின் திருவடிகளில் ஐக்கியமானார். அவர் பகவானிடம் கேட்டுக்கொண்டபடி வைகுண்ட ஏகாதசியன்று பகவான் அனைத்து ஆலயங்களிலும் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தருவார். இதன் மூலம் அனைத்து பக்தர்களுக்கும் வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது ஐதீகம்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று சென்னை திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு வைபவம் நடைபெற்றது. பெருமாள் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளும் காட்சியை தரிசித்து வழிபடப் பக்தர்கள் நேற்று (திங்கள்) நள்ளிரவு முதலே குவியத் தொடங்கினர். நான்கு மணிக்கு முன்பாகவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்துக்கு உள்ளும் புறமும் தரிசனத்துக்காகக் காத்திருந்தனர். அதிகாலை 4 மணி 30 நிமிடத்துக்குப் பக்தர்கள்,  'கோவிந்தா, கோவிந்தா' என்று கோஷமிட பெருமாள் பரமபத வாசலில் எழுந்தருளினார்.

சொர்க்க வாசல் திறப்பு

அதைத் தொடர்ந்து திருக்கோஷ்டியினர் பாசுரங்கள் இசைக்கப் பெருமாள் திரு மண்டபத்தில் எழுந்தருளினார். அதன்பின் பக்தர்கள் பரமபத வாசல் வழியாகச் சென்று பெருமாளை வழிபட அனுமதிக்கப்பட்டனர். 

கோயிலுக்கு வெளியே கூடியிருக்கும் பக்தர்கள் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வைக் காண்பதற்காக பிரமாண்ட  திரைகள் வைத்து ஒளிபரப்பு செய்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க