ராஜபாளையம் அருகே பாலியல் தொந்தரவால் இளம்பெண் தற்கொலை! - ஆட்டோ ஓட்டுநர் கைது | Auto driver arrested in rajapalayam over sexual harassment to married woman

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (18/12/2018)

கடைசி தொடர்பு:21:00 (18/12/2018)

ராஜபாளையம் அருகே பாலியல் தொந்தரவால் இளம்பெண் தற்கொலை! - ஆட்டோ ஓட்டுநர் கைது

ராஜபாளையம் அருகே பாலியல் தொந்தரவுக்கு ஆளான இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். பாலியல் தொந்தரவு செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

இளம்பெண் தற்கொலை

கைது செய்யப்பட்ட இசக்கிமுத்துவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தொட்டியப்பட்டியைச் சேர்ந்தவர் சக்கரைத்தாய் (23). இவருக்கும் திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டி அருகே உள்ள மலையடிபட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. கடந்த சில நாள்களுக்கு முன் சக்கரைத்தாய் தொட்டியப்பட்டியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தார். பின்னர் கணவர் வீட்டுக்குச் செல்வதற்காக நேற்று இரவு ராஜபாளையம் பேருந்து நிலையத்துக்குச் சென்றார். பின்னர் காந்திசிலை ரவுண்டானாவில் இருந்து ஆட்டோ மூலம் புதிய பேருந்து நிலையத்துக்குச் சென்றார். ஆனால், ஆட்டோ வேறு திசையில் சென்றுள்ளது.

அப்போது ஆட்டோ ஓட்டுநரான இசக்கிமுத்து என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் மனமுடைந்த சக்கரைத்தாய் தன்னுடைய தாய் வீட்டுக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து அவரின் கணவர் ஈஸ்வரன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வன்னியம்பட்டி போலீஸார் ஆட்டோ ஓட்டுநரான இசக்கிமுத்து (28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.