`முன்விரோதத்தால் நேர்ந்த கொலை’- குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு | Theni Court Ordered life sentence for murder suspect

வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (19/12/2018)

கடைசி தொடர்பு:07:03 (19/12/2018)

`முன்விரோதத்தால் நேர்ந்த கொலை’- குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு

தேவதானப்பட்டி அருகே, முன் விரோதம் காரணமாக மண்வெட்டியால் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

கொலை

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி தெற்குத்தெருவைச் சேர்ந்தவர்கள் முத்துக்கிருஷ்ணன் மற்றும் ராசு. கடந்த 2013-ம் ஆண்டு இருவருக்கும் இடையே இருந்த முன் விரோதம் காரணமாக மண்வெட்டியால் முத்துக்கிருஷ்ணனை வெட்டிக் கொலை செய்தார் ராசு. இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த தேவதானப்பட்டி காவல்துறையினர், ராசுவை கைது செய்தனர்.

இவ்வழக்கு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்த நிலையில், வழக்கு விசாரணை முடிவடைந்து, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளி ராசுவுக்கு, கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும், கொலை செய்த பின்னர் தடயங்களை மறைத்த குற்றத்துக்காக மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீனிவாசன் தீர்ப்பு வழங்கினார். இதைத் தொடர்ந்து, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் ராசு.