கஜாவால் சரிந்த தேக்கு மரங்கள்! - பதுக்கும் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக ஊழியர்கள் | Teak trees stealed by thiruvarur central university officers

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (19/12/2018)

கடைசி தொடர்பு:15:50 (19/12/2018)

கஜாவால் சரிந்த தேக்கு மரங்கள்! - பதுக்கும் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக ஊழியர்கள்

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம் வளாகத்தில் தேக்கு மரங்கள் திருடப்பட்டு பதுக்கப்பட்டதை அடுத்து பல்கலைக்கழக ஊழியர்களிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம்

திருவாரூர் அருகே நீலக்குடியில் அமைந்துள்ளது தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம். அதன் எதிரே வெட்டாறு ஓடுகிறது. அதன் கரைகளில் வனத்துறையால் வளர்க்கப்படும் தேக்கு மரங்கள் பல உள்ளன. சென்ற மாதம் கஜா புயல் தாக்கியபோது, இங்கிருந்த தேக்கு மரங்கள் சாய்ந்தன. புயலால் சாய்ந்துபோன மரங்கள் திருடப்படுவதாகத் திருவாரூர் வனச்சரக அலுவலகத்துக்குத் தகவல் வந்துள்ளது.

தேக்கு மரங்கள்

இந்தத் தகவலையடுத்து, வனச்சரக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, வனவர் சுப்பிரமணியன் ஆகியோர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் எதிரே உள்ள நீலக்குடி வெட்டாற்றுக் கரையில் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், நீலக்குடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வருவாய்த்துறை ஊழியர் பன்னீர்செல்வம் என்பவர் சாய்ந்துபோன ஒரு சில தேக்கு மரங்களை மத்தியப் பல்கலைக்கழக ஊழியர்கள் உதவியுடன் மத்தியப் பல்கலைக் கழகத்துக்குள் எடுத்துச் சென்று பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம்

அதைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் மற்றும் பல்கலைக்கழகப் பாதுகாவல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் சிலர் இந்தத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக வனச்சரக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும், பல்கலைக்கழக ஊழியர்கள் இந்த சம்பவத்தில் யாரேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.